56 வயதிலும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மனைவியை பராமரிக்கும் அன்பு கணவன்

2E9AFA7B00000578-3325744-That_s_dedication_Du_Yuanfa_left_84_tries_to_see_if_his_bed_boun-a-34_1447956834364

சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள ஷன்டாங் மாநிலத்தின் சஞ்சியாயூ இடத்தைச் சேர்ந்த டூ யூவான்பா (89) இவரது மனைவி தான் சோ யூவ்.  இவர்களுக்கு 50 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகியது.  இவரது மனைவி திருமணமான ஒரு சில மாதங்களிலேயே முடக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.  நிலக்கரி சுரங்கம் ஒன்றில் பணிபுரிந்து வந்த டூ கடிதத்தின் மூலம் அறிந்து வீட்டுக்கு வந்தார்.

மனைவியை பார்க்கும் போது அவர் திரும்ப கூட முடியாமல் உள்ளதை கண்டு மனம் நொந்துப்போனார். அன்றுமுதல் தன் மனைவியை முழுவதுமாக கவனித்துக்கொள்ள முடிவெடுத்தார்.  மனைவிக்கு ஆகாரம், உணவு, குளியல் மற்றும் இயற்கை உபாதைகள் அனைத்தையும் அவரே செய்கின்றார்.

டூவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சோ யூவ்வை விவாகரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள் என்று அறி(வலியு)வுறுத்தியுள்ளார்கள். ஆனால் டூ சற்றும் மனம் மாறாமல் இப்பிறவியில் இவள் தான் என் மனைவி நான் உயிரோடு இருக்கும் வரை என் மனைவியை பார்த்துக்கொள்வேன் என்று வேலையை கூட விட்டுவிட்டு மனைவியை பார்த்துக்கொள்கின்றார்.

விவசாயம் செய்து கொண்டு காய்கறிகளை விற்று பணமீட்டி சொற்ப வாழ்க்கை என்றாலும் சொர்க்க வாழ்க்கையாக வாழ்ந்து வருகின்றார் டூ.  தன் மனைவிக்கு டூ ஸ்பூன் மூலம் மனைவிக்கு பிடித்த NOODLES  உணவை ஊட்டி விடுகின்றார். 2E9AFA7F00000578-3325744-Selfless_love_The_humble_husband_from_Sunjiayu_village_China_has-a-35_1447956844150

சிறிதும் சலிப்பின்றி இவர் மனைவிக்கு செய்த வரும் அன்பைப்பார்த்து அக்கம்பக்கத்தினரும் உறவினரும் இவர்களுக்கு மருந்து மற்றும் வேண்டிய உதவிகளை செய்து வருகின்றார்கள். ஆனால் உணவுகள் மற்றும் மருந்துகள் தரப்படும் போது விஷமுள்ளதா என அறிய அதைக்கூட முதலில் தான் அருந்தியப்பின் தான் மனைவிக்கு டூ தருகின்றார். 2E9AFA8F00000578-3325744-All_round_Du_does_all_housework_at_home_from_boiling_medicine_to-a-38_1447956873744

இன்றைக்கு உள்ள இளம் தம்பதியினர் ஒரு சிறிய சிணுங்கல் என்றாலே விவாகரத்து வேண்டும் என்று கோர்ட்டுக்கு போய்விடுகின்றார்கள்.  எவ்வித எதிர்பார்ப்பும் மனைவியிடம் எதிர்பார்க்காமல் எவ்வித சுகமும் இல்லாமல் தள்ளாத வயதிலும் துணைவிக்கு துணையாக இருந்து பராமரித்து வரும் இவர் கோடியில் ஒருவர் தான்.

Leave a Reply

Your email address will not be published.