பழம் கனிந்து பாலில் விழாமல் ஜம்ப் ஆயிடுச்சு….தனி ஒருவன் ஆகின்றார் – விஜயகாந்த – தனித்துப்போட்டியிடுகின்றார்

201602211406162332_Vijayakanths-king-or-kingmaker-comments-give-hope-to_SECVPF

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்ததையடுத்து, அது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருவதோடு தேமுதிக ட்விட்டரில் அதிகமாக பிரபலம் ஆகியுள்ளது.

உலக மகளிர் தினத்தையொட்டி, தேமுதிக மகளிரணி சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA திடலில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் தனது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் அவர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனியாகத்தான் நிற்கும். காஞ்சிபுரம் மாநாட்டில் King -காக இருக்க வேண்டுமா, King maker ஆக இருக்க வேண்டுமா என்று கேட்டேன். King-காக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள்.

அதன் பிறகு, வேட்பாளர் நேர்காணலிலும் கேட்டேன். அந்த முடிவுகளின்படி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனியாகத்தான் நிற்கிறது. என்னைக் கூட்டணிக்கு அழைத்த அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் நன்றி என்று கூறினார். இந்த செய்தி மிக வேகமாக டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து கட்சி தொண்டர்கள், ரசிகர்கள், என பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன.. இதனால் தேமுதிக அதிக ட்ரண்டிங் இடத்தை பிடித்தது.

பழம் கனிந்துவிட்டது பாலில் விழ வேண்டியது தான் பாக்கி என்று எதிர்பார்த்தவர்கள் அனைவருக்கும் ”ஏமாற்றத்தை” வைத்துவிட்டு பழம் கனிந்து ஜம்ப் ஆயிடுச்சு …….

புரிகின்றதா தேர்தலில் யார் ஜெ யிக்கப்போகின்றார்கள் என்று?

Leave a Reply

Your email address will not be published.