ஆடம்பர ஐபோனுக்கு ஆசைப்பட்டு பெற்ற குழந்தையை விற்ற தம்பதியினர்

download (14)

ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழ்வதற்காக பெற்ற குழந்தையை விற்றுவிட்டு ஐபோன் மற்றும் பைக் வாங்க முடிவெடுத்தது பெரும் புரளியை சீனாவில் கிளப்பியுள்ளது.

சீனாவின், புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், தன், 18 நாள் குழந்தையை விற்பதாக, சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார். அதைப் பார்த்த ஒருவர், 2.40 லட்சம் ரூபாய் கொடுத்து, அக்குழந்தையை வாங்கிச் சென்றுள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட தம்பதியினர் ஆடம்பரமாக வாழ தொடங்கியுள்ளனர். இது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் காதில் எட்டி கடைசியில் போலிசார்கள் காதில் விழுந்துவிட பிரச்சினை விஷ்வரூபம் எடுத்துவிட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், இளம் தம்பதியை கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், ஐபோன் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்க, குழந்தையை விற்றது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், ஆணுக்கு மூன்று ஆண்டும், பெண்ணுக்கு இரண்டரை ஆண்டும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

குழந்தையை வாங்கியவரும் இந்த வழக்கில் சிக்கிக்கொண்டார். சீனாவில், ஆண்டுதோறும், இரண்டு லட்சம் குழந்தைகள் கடத்தப்பட்டு, ‘ஆன்லைன்’ மூலம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.