மரணபயத்தின் போது செய்யவேண்டியது.

deadfear

 

மரண பயம் சிலரது கண்களிலேயே காண முடியும் என்று சொல்வார்கள்.  படிப்பில் தோல்வி, தொழிலில் நஷ்டம், வாழ்க்கையில் தோல்வி, கனவு தொலைந்து விடுமோ என்ற பயம், வேலை கிடைக்காததால் தோல்வி, பணம் இழந்ததால் தோல்வி, காதல் தோல்வி என பல காரணங்களால் மரணத்தை தேடி மனிதர்கள் செல்வதுண்டு.  வாழ்வின் மீது ஏற்பட்ட வெறுப்பு கூட மரண பயத்தை தோற்றுவிக்கலாம்.  தற்கொலை செய்து கொள்வதால் ஆவியாக அல்லது பேயாக சுற்றுவான் என்றும் சொல்வதுண்டு.  மரணத்தின் மீதான பயத்தை ஏற்படுத்துவதற்காக சொல்வதுண்டு.  இது போன்ற எண்ணங்கள் தோன்றும் போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்.  தைரியமாக இருக்க வேண்டும் என்று பொதுவாக சொல்வார்கள்.  தைரியம் மற்றும் தன்னைப்பற்றிய நம்பிக்கையும் இருந்தால் தற்கொலையைப் பற்றி அவன் யோசிக்கவே மாட்டான்.  துணிச்சல், வீரம் என்று வாழ்ந்த பலரும் கூட தற்கொலை செய்துகொண்டது உண்டு.  இதிலிருந்து வெளிவர சில வழிகள் உண்டு,  அதைப்பற்றி தான் நாம் இனி காண விருக்கிறோம்.

மரண பயம் ஏற்படும் போது அதிலிருந்து வெளிவர செய்ய வேண்டியவை

  • தனிமையை தவிர்க்க வேண்டும்

தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் எழுகின்ற பொழுதே தனிமையில் இருப்பதை தவிர்த்து விடுங்கள்.  கூடி பழகுங்கள்.  அதுதான் உங்களுக்கு நல்லது.  உங்களது மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் தான் உங்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறது.  இவ்வாறான எண்ணங்கள் உங்களுக்கு தோன்றினாலும் தனிமையில் இருக்காதீர்கள்.  மற்றும் உங்களது நண்பருக்கு தோன்றினாலும் தனிமையில் இருக்க வெண்டாம் என்று ஆலோசனை கூறுங்கள்.

  • ஓர் விஷயத்தில் சிந்தனையை குவிக்க தொடங்குஙகள்

மரணம் அல்லது தற்கொலை என்னும் எண்ணத்தில் இருந்து விலகி, வேறு ஏதேனும் ஒரு விஷயத்தில் உங்கள் எண்ணத்தை குவிக்க ஆரம்பியுங்கள்.  இந்தச் செயல் உங்கள் மனதை திசைத்திருப்ப செய்கிறது.  வேறு  வழிக்கு கூட்டிச் செய்கிறது.

  • உங்களை காயப்படுத்தியவரிடம் பேசுங்கள்

சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் பொழுது, நமக்கு பிடித்தவர்களுடன் கடைசியாக ஒரு முறை பேசி விட்டு இறந்து விடலாம் என்று எண்ணுவார்கள்.  ஆனால் நம்மை காயப்படுத்தியவர்களை எண்ணுங்கள்.  அப்போதுதான் சாதிக்க வேண்டும் என்கின்ற ஒரு எழுச்சி வரும்.  எனவே உங்களை காயப்படுத்தியவர்களிடம் பேசுங்கள்.  மரண பயம் துட்சமாகி விடும்.

  • போன் கால்களை தவிர்க்க வேண்டாம்

பெரும்பாலும் தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் அவர்களுக்கு வரும் போன் கால்களை எடுத்து பேசுகின்றதில்லை என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டிருக்கின்றது.  இது முற்றிலும் உண்மை.  இந்த விஷயத்தல் உங்களுக்கு வரும் அழைப்புக்களை எடுத்து பேசினாலே, உங்களது மனது வேறு விஷயத்தில் பயனிக்க தொடங்கும்.  மரணத்தை பற்றிய எண்ணத்தில் இருந்து விடுபட்டு விடும் என்பது தான் உண்மை.

  • ஒரு இலட்சம் பேர் தற்கொலை

இந்தியாவலி 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு காரணமாக இருப்பது தற்கொலைதான்.  ஒரு வருடத்தில் ஒரு இலட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைகின்றனர்.

  • உங்கள் கனவுகளை கொஞ்சம் யோசித்து பாருங்கள்

ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சியம் இருக்கும்.  அதற்காக நீங்கள் எடுத்த பெரும் முயற்சிகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.  அதை விட்டு விட்டு தற்கொலை செய்து கொள்ள நினைப்பது பெரும் குற்றம்.  உங்களை விட்டு சென்றதை நினைத்து தற்கொலை செய்து கொள்ள நினைக்காதீர்கள். உங்களுக்கு இருப்பதை நினைத்து வாழ முயற்சிப்பது தான் உத்தமம்.  வாழ நினைத்தால் வாழலாம்.  வழியா இல்லை உலகில். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  மரண பயம் உங்களை அண்டாது.

  • மீண்டும் கிடைக்காது

மனித வாழ்க்கை விலைமதிப்பற்ற பொருள்.  மிகவும் உன்னதமானது.  இந்த விலை மதிப்பற்ற பொருள் மீண்டும் உங்களுக்கு கிடைக்காது.  எனவே சிறு சிறு பிரச்சனை,கள் மற்றும் ஆத்திரமூட்டும் சம்பவங்களுக்காக  உங்களை செயல் இழக்க செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்., சீரமைத்து கொள்ளுங்கள். . உங்கள் வெற்றிப்பாதையை முன்னேற்றமடைய முயற்சி செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.