கூலி வேலைக்கு போன இடத்தில் லாட்டரியில் 1 கோடி பரிசு

51336181

பஞ்சம் பிழைக்க கேரளாவுக்கு கட்டிடத்தொழிலாளியாக சென்ற கூலியாள் ஒருவருக்கு அதிஷ்டமாக லாட்டரியில் ஒரு கோடி அடித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கேரளாவிற்கு கட்டுமாண வேலைக்குச் சென்றார். அங்கு அவருக்கு லாட்டரியில் 1 கோடி ரூபாய் பரிசு விழந்தது. மேற்கு வங்க மாநிலம் பர்துவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மொபிஜூல் ரஹிமா ஷேக். 22 வயதுடைய இவர் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வருபவர்.

இவர் தனது நண்பர்களின் உதவியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேலை தேடி கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்குச் சென்றார். அங்குள்ள ஒரு கட்டிட நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. கடந்த வெள்ளிக் கிழமை முதல் அவர் வேலைக்கு செல்லத் தொடங்கினார்.

மொபிஜூல் தனக்கு கிடைத்த முதல் நாள் கிடைத்த சம்பளத்தில், கேரள அரசின் காருண்யா லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் மறுநாள் வழக்கம்போல வேலைக்குச் சென்றுள்ளார். அன்று நடந்த லாட்டரி குலுக்கலில் முதல் பரிசாக ரூ.1 கோடி மொபிஜூல் ரஹிமா ஷேக் வாங்கிய லாட்டரிக்கு விழுந்தது.

இந்நிலையில், அவருக்கு 2 நாட்கள் கழித்துதான் தனக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பது தெரியவந்தது. தான் வாங்கிய ஒரு கோடி பரிசு விழுந்ததால் தனது உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் காவல்துறையினரின் உதவியை நாட முடிவு செய்து, சேவாயூர் காவல்நிலையத்தில் இது குறித்த விவரத்தை தெரிவித்துள்ளார்.

அந்த தொகையை யாரும் அபரித்துவிடாமல் இருப்பதற்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். அன்று சிவராத்திரி என்பதால் வங்கி விடுமுறையாக இருந்தது. எனவே, மறுநாள் வருமாறு மொபிஜூலிடம் சப் இன்ஸ்பெக்டர் கூறினார்.

இந்நிலையில், தனக்கு அறையில் தங்க பயமாக உள்ளது என்று கூறிய அவர் காவல் நிலையத்திலேயே தங்கினார். மறுநாள் செவ்வாய்கிழமை காவல்துறையினரின் உதவியுடன் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் சேர்த்தார். இது குறித்து மொபிஜூல் ரஹிமா ஷேக் கூறுகையில், நன்றாக சாப்பிட வேண்டும் என்றும் ஊருக்குச் சென்று அங்கு பெரிய வீடு கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.