வளமான வாழ்வுக்கு சிறந்த மூலிகை மருத்துவம்

download (11)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – நோயற்ற வாழ்வுக்கு அர்த்தம் நோய் வருவதற்கு முன்பே அதனிடமிருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும்.  இதற்கு ஆங்கில மருத்துவத்தை எடுத்துக்கொண்டால் உதாரணமாக போலியோ வராததற்கு தடுப்பூசிகள் போட வேண்டும்.  ஒரு முறை போலியோ தடுப்பூசி போடலாம் நாள் கணக்கில் போட முடியாது.

அதே போல் தலைவலி வந்துவிட்டால் மாத்திரை சாபபிடலாம்.  தினமும் தலைவலி வராததற்கு மாத்திரைகள் சாப்பிட முடியாது.  இது போல் ஒவ்வொரு நோய்க்கும் ஆங்கில மருந்துகளை தினசரி உட் கொள்ள முடியாது.  வந்த நோயை குணப்படுத்தும் தன்மையே குறைவு இதில் வராத நோயை குணப்படுத்த மாத்திரை சாப்பிட்டால் பக்கவிளைவுகள் வந்துவிடும்.

இதனால் தான் மூலிகை மருத்துவம் சிறந்தது.  தினமும் துளசியை சாப்பிட்டாலும் பக்க விளைவுகள் வராது. நோய் இருந்தால் நோய்களை குணமாக்கும். இல்லையேல் உணவாக மாறி உடலை அந்நோய் ஏற்படாதவாறு பாதுகாக்கும்.

தினமும் உண்ணும் உணவிலேயே மருந்துக்களும் உள்ளன, நோய்களை உண்டாக்கும் கிருமிகளும் உள்ளன. சைவ உணவுகளிலேயே அதிக சத்துக்கள் உள்ளன. அதிக செலவு செய்து வாங்கிச் சாப்பிடும் அசைவ உணவுகளை விட அதில் பாதியளவு செலவு செய்து சாப்பிடும் சைவ உணவுகளில் சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன.

சாப்பிடும் உணவுகளில் உப்பு, காரம், புளி இம்மூன்றும் குறைவாக இருந்தாலே அந்த உணவு சத்துள்ள உணவாகிவிடுகின்றது.  பச்சைக் காய்கறிகளில் இயற்கையிலேயே அதற்கான சுவைகள் உள்ளன.

துரித உணவுகளை நீக்கிவிட்டு வேர்க்கடலை, கொண்டைக்கடலை, பச்சைபயறு, முளைக்கட்டிய தானிய உணவுகள் போன்றவைகளை உட்கொள்ளவேண்டும்.  தினமும் கொண்டைக் கடலை, பச்சைபயறு இரண்டையும் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர்ச்சத்துக்கள் அதிகமாகிக் கொண்டே வரும். எந்தப்பிரச்சினைகளும் வராது.

பேக்கிங், மெழுகுப்பூச்சிய ஆப்பிள் பழங்கள், இவைகள் அனைத்தும் நம் உடலுக்கு தீங்குதான், மக்காச்சோளம், கீரைகள், கொய்யா, தேங்காய் போன்ற உணவுகள் உடலுக்கு வளமூட்டுபவைதான்.

அசைவத்துக்கு நிகரான சத்துக்கள் கொண்டைக்கடலையில் உள்ளது.  ஒரு நாள் ஒரு கிலோ அசைவ உணவு வாங்கும் செலவில் ஒரு வாரத்திற்கு தேவையான கொண்டைக்கடலை வாங்கிக் கொள்ளலாம்.  தினமும் வேகவைத்து சாப்பாட்டோடு சேர்த்துக்கொடுக்கலாம்.

பச்சைப்பயறு, பைத்தம்பருப்பு, மொச்சை, சோயா ஆகியவைகளும் இந்த அட்டவணையில் உள்ளது. மணிக்கு 200 மிலி தண்ணீர் வீதம் ஒரு நாளைக்கு எப்படியும் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.  தண்ணீர் அதிகமானால் உடலில் உள்ள வியர்வை வழியாக அழுக்கை வெளிக்கொண்டு வந்துவிடும்.

கடின உழைப்பு உள்ள வேலையாட்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பார்கள். அவர்கள் உடலுழைப்பால் வாழ்பவர்கள். தினமும் அவர்கள் நோய்க்கிருமி மற்றும் அழுக்குகளை வியர்வை மூலம் வெளிக்கொண்டு வந்து விடுவார்கள்.  உட்கார்ந்து வேலை பார்க்கும் மனிதர்கள் கண்டிப்பாக தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடந்தே மாடிப்படி ஏறுதல், ஸ்கிப்பிங் கயிறு தாண்டுதல் போன்ற எளிய உடற்பயிற்சிகளையாவது செய்ய வேண்டும்.

குடிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகத்தை தூளாக்கி போட்டுவிட்டு கொதிக்க வைத்துவிடுங்கள். இந்த தண்ணீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கிருமிகளும், நீரில் உள்ள கிருமிகளும் அரவே நீ்ங்கிவிடும்.cropped-cropped-img_38941

உணவுகளை அந்தந்த நேரத்தில் சரியாக உண்ணுங்கள், டீ, காபியை் முடிந்தளவு குறைத்துக்கொள்ளுங்கள் ஒரு நாளைக்கு இரண்டு என்பதே அதிகம் தான்.  பால் சாப்பிடலாம். சுக்கு, பனைவெல்லம், மிளகு, பனைவெல்லம் கலந்த டீ வைத்துக்கொள்ளவும்.  இதை களைப்பு ஏற்படும் போது பருகினால் உடனே தெம்பு வரும்.

ஒழுக்கமாக வாழ்வதே சிறந்த வாழ்க்கை. மது, மாது, போதைப்பொருட்கள், புகை போன்ற பழக்கங்கள் ரொம்ப கஷ்டம்.  தம்பதியர்களே தங்களது வாழ்வில் அளவுக்கதிகமாக உறவுகளை வைத்துக்கொள்ளாமல் அளவுடன் வைத்துக்கொள்வதே சிறந்தவையாகும்.   இதனால் இளமையுடன் நோயின்றி நீடூழி வாழ்ந்துவிடலாம்.

உங்களது ஆரோக்கியம் என்பது உண்ணும் உணவிலும் பழக்கவழக்கங்களிலும் தான் உள்ளது.

2 Responses to வளமான வாழ்வுக்கு சிறந்த மூலிகை மருத்துவம்

  1. Anonymous says:

    நற்செய்திதான் இது பகிரக்கூடியது

Leave a Reply

Your email address will not be published.