மனைவியின் பிரிவால் மனமுடைந்த விமானி 200 பயணிகளோடு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல்

4916e5a0-e3b8-11e5_1073098c

தன் மனைவி தன்னை விட்டுப் பிரிந்து செல்வதால் மன உளைச்சல் அடைந்த விமானி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.  இவர் முடிவெடுத்துள்ளது கூட தற்போது பிரச்சினையில்லை அது அவர் சொந்த முடிவு.  ஆனால் அவர் கூண்டோடு சாக முடிவெடுத்துள்ளார்.

இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து ஜப்பானுக்கு 200 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தை ஓட்ட 40 வயதுள்ள ஆண் விமானி நியமிக்கப்பட்டிருந்தார். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமான நிலைய அதிகாரிகளுக்கு விமானி செல்போனில் ஒரு தகவல் அனுப்பினார். அதில் ‘எனது மனைவி என்னை விட்டு பிரிந்து விடுவதாக அறிவித்து விட்டாள். இதனால் நான் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன் என்று.

எனவே நான் தற்கொலை செய்ய முடிவு எடுத்து விட்டேன்.விமானத்தை எங்காவது மோத வைத்து 200 பயணிகளையும் கொலை செய்து விட்டு, நானும் மடிவேன்”  என தெரிவித்து இருந்தார். இதை படித்ததும் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அந்த விமானத்தை புறப்படவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்த விமானி விமானத்தில் இருந்து இறக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சக விமானி விமானத்தை இயக்கினார். இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விமானியை விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.