விஷக்கடிக்கு மருந்து செங்காந்தள் பூவில் இருக்கு

download (10)

செங்காந்தள்  மலர் தமிழ் நாட்டின் மாநில மலர். இந்த மலர் மூலிகை குணம் உடையது.  சாதரணமாக  வனப்பகுதிகளிலும் காட்டுப்பகுதிகளிலும் பெருமையாக வளரும் செங்காந்தள் மலர் விஷக்கடிக்கு நிறைய உதவுகின்றது.  இதைக்கண்வலிப்பூ என்று அழைப்பர்.

செங்காந்தள் செடி மூலிகை விஷக்கடிகளுக்கும், விஷ ரோகங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. சாரைப்பாம்பு, அரணை, ஜலமண்டலம் இவைகள் கடித்து பாதிக்கப்பட்டவர்கள் இச்செடியின் வேர், குப்பைமேனி வேர், நீலிவேர் இவைகளை சேர்த்து அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உப்பில்லாமல் தினமும் இரண்டு வேளை மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வர விஷக்கடிகள் குணமாகும்.

சிறுபாம்புக்கடி, வண்டுக்கடி இவை போன்ற விஷநோய்களுக்கு இதன் இலையை அரைத்து மேலே பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்து வர மேற்கண்ட வியாதிகள் குணமாகும். கார்த்திகைசெடிவேர், எட்டிப்பட்டை,வெள்ளருகு,மிளகு இவை சமபாகம் கூட்டி அரைத்துக் காலை,மாலை சாப்பிட்டால் 18 வித எலிக்கடி விஷம் நீங்கும்.

செங்காந்தள் வேர் தைலத்தை,வாரம் ஒருமுறை தேய்த்து தலைமுழுகி வர எலிக்கடி, வண்டுக்கடி, பூரான்கடி, செவ்வட்டை, சாரைப்பாம்பு முதலிய விஷ நோய் உடலை பாதிக்காமல் குறைந்து விடும். இந்த தைலத்தை தேய்த்து குளித்தால் மேகநோய், கிராந்தி, பத்துபடை,சொறிசிரங்கு, முதலிய வியாதிகள் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பத்தியமாக புளி, புகை, லாகிரி நீக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.