நாயுருவியின் நன்மைகள்

images (5)

தமிழகத்தில் உள்ள  அனைத்துப்பகுதிகளிலும் உள்ள வாரிகள், ஏரிக்கரைகள் வறண்ட தரிசு நிலங்களில் தானாகவே வளரக்கூடியது. நடந்து சென்றால் ஆடைகளில் ஒட்டிக்கொள்ளும் சிறு முட்களை கொண்ட நெற்கதிர் போன்ற தோன்றத்தை உடையது.  இலைகள் நீள் வட்ட வடிவத்தில் கொண்டிருக்கும்.

இந்த நாயுருவியில் செந்நாயுருவி என்று ஒன்று உள்ளது. இது சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த நாயுருவி மிகவும் தெய்வீகமானது.  இதைத்தான் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது.  இந்த ஒட்டும் முட்களை்க் கொண்ட பகுதிதான் இதன் விதை.

நீர்க்கட்டு குணமாக நாயுருவி இலையையும் காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தொப்புள் மீது பற்றுப்போட நீர்க்கட்டு குணமாகிவிடும்.

பிஞ்சு இலை (கதிர் முளைக்காத) இதன் இலையை இடித்துச் சாறு பிழிந்து சம அளவில் நீர் கலந்து காய்ச்சி தினமும் மூன்று வேளை 3 மி.லி. அளவு 5-6 நாள் சாப்பிட்டு பால் அருந்தவும். இதனால் தடைபட்ட சிறுநீர் கழியும். சிறுநீரகம் நன்கு செயல்படும். சிறுநீர்த் தாரை எரிச்சல் இருக்காது. சூதகக்கட்டு-மாதவிலக்கு தடைபடுவது நீங்கும். பித்த பாண்டு, உடம்பில் நீர் கோத்தல், ஊதுகாமாலை, குருதி மூலம் ஆகியன குணமாகும்.

நாயுருவி இலையை பருப்புடன் சேர்தது கடைந்து சாப்பிட நமக்கு நுரையீரல் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.