பல்துலக்குதில் கவனிப்பது!

teath

 

பல் விளக்குவதை பலரும் எளிதான, ஈஸியான ஒன்றாக நினைக்கின்றார்கள்.  ஆனால் பற்களை சரியான முறையில் விளக்காவிட்டால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.  மேலும் பற்களை விளக்குவதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளன.  அந்த கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்தால் வாயில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.  வாய் துர்நாற்றம், பல்வலி, மஞ்சள் நிற பற்கள் போன்றவற்றிற்கான சில அருமையான இயற்கை நிவாரணிகள் இருக்கின்றன.  அது மட்டுமின்றி, பலர் பற்களை சுத்தப்படுத்தும் பிரஷ் மற்றும் பற்பசைகளை தேர்ந்தெடுப்பதில் கூட தவறு செய்கின்றனர்.  இன்னும் சிலர் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு செல்லும் பொழுது நேரமாகிவிட்டது என்று சரியாக கூட வாயைக் கழுவுவதில்லை.  இப்படியெல்லாம் செய்தால் பற்களில் பிரச்சனைகள் மற்றும் நோய்கள் வராமல் என்ன செய்யும்?  பல் துலக்குவதில் பல தவறுகளைச் செய்து கொண்டு வருகிறோம்.  அவற்றில் மாற்றம் கொண்டு வந்தால் நிச்சயம் மஞ்சள் நிற பற்கள், வாய் துர்நாற்றம் மற்றும் ஈறு பிரச்சனைகள் போன்றவற்றை தவிர்க்கலாம்.  இப்போது பற்களை துலக்குவதில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள் என்னவென்று பார்ப்போம்.

பற்களை விளக்குவதில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள்.

  • தவறான டூத் பிரஷ்

விலை கம்மியாக உள்ளது என்று பற்களை விளக்குவதற்கு தரம் இல்லாத டூத் பிரஷ்களை உபயோகப்படுத்தினால் அது வாய் சுகாதாரத்தையே பாதிக்கும்.  ஆகவே பற்களை விளக்குவதற்கு உபயோகப்படுத்தும் டூத் பிரஷ்ஷில் முட்கள் மென்மையாக இருக்க வேண்டும்.  தலைப்புகுதி மிகவும் பெரியதாக இல்லாமல் இருக்க வேண்டும்.  வாயின் மூலை முடுக்குகளில் சென்று வாயில் தங்கியுள்ள உணவுத்துகள்களை வெளியேற்றும் அளவிலான டூத் பிரஷ்ஷாக இருக்க வேண்டும்.

  • கடுமையாக தேய்ப்பது

டூத் பிரஷ்ஷைக் கொண்டு  வாயில் உள்ள அசுத்தங்களை முற்றிலும் நீங்க வேண்டுமென்று கடுமையாகத் தேய்ப்பார்கள்..  ஆனால் அப்படி தேய்த்தால் ஈறுகள் புண்ணாகும்.  ஈறுகள் அதிகமாக புண்பட்டால் ஈறுகளில் தொற்றுகள் மற்றும் இரத்தக் கசிவு போன்றவைகள் ஏற்படக்கூடும்.  எனவே எப்பொழுதும் மென்மையாகவே பற்களை துலக்க வேண்டும்

  • தேய்க்கும் நேரம்

தினந்தோறும் காலையில் இரண்டு நிமிடங்களும் இரவில் இரண்டு நிமிடங்களும் பற்களை துலக்கினால் போதுமானது.  பற்களில் உள்ள அழுக்குகள் போகவேண்டுமென்று நீண்ட நேரம் பற்களை துலக்கக் கூடாது.  இதனால் பற்கள் மற்றும் ஈறுகள் பாதிக்கப்படுகின்றன.  இதுவே மிகவும் குறைந்த நேரம் பற்களைத் துலக்கினால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

  • தவறான பேஸ்ட்

பேஸ்ட்டின் கலர் மற்றும் ருசி நன்றாக உள்ளது என்று தவறான பேஸ்ட் கொண்டு பற்களை துலக்குவதும் ஆபத்தை விளைவிக்கும்.  ஆகவே பேஸ்ட் வாங்கும் பொழுது அதில் ட்ரைக்ளோசன், புளுரைடு, ஜைலிட்டால் போன்ற பொருட்கள் அடங்கி உள்ளனவா என்று பார்த்து வாங்க வேண்டும்.  மேற்கூறியவைகள் இருந்தால் அந்த பேஸ்ட்களை வாங்கி உபயோகப்படுத்தலாம்.  எல்லாவற்றிலும் புளுரைடு அதிகம் உள்ள பேஸ்ட்தான் மிகவும் சிறந்தது.  ஏனென்றால் பற்களுக்கு இதுதான் அதிகமான  பாதுகாப்பைத் தரும்..

  • வாயை சரியாக கொப்பளிக்காதது

எப்பொழுதும் பற்களை நன்றாக துலக்க வேண்டும்.  பிறகு சுத்தமான நீரில் வாயை குறைந்தது ஐந்து முறையாவது நன்றாக கொப்பளிக்க வேண்டும்.  வாயை நன்றாக கொப்பளிக்கா விட்டால் பற்களை துலக்கி வெளிவந்த துகள்கள் வாயில் ஒட்ழக்கொண்டு இருக்கும். உணவுத் துகள்கள் முற்றிலும் வெளியேறாமல் இருக்கும். இந்தச் செயல்கள் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது..இதுவே நீடித்தால் ஈறுகளும் பாதிக்கப்படும்.

  • கடைவாய் பற்களில் கவனம் அவசியம்.

எல்லோரும் பற்களை துலக்கும் போது முன்புறம் மட்டும் நன்றாக தேய்ப்பார்கள்..  முன் பற்களைவிட கடைவாய்ப் பற்கள் தான் உணவுப் பொருட்களை உடைக்கிறது.  அதனால் கடைவாய்ப பற்களில் உணவுத் துகள்கள் நிறைய மாட்டியிருக்கும்.  ஆகவே பற்களை துலக்கும் பொழுது கடைவாய்ப் பற்களின் மீது கொஞ்சம் மிகுதியாக கவனம் செலுத்துங்கள்.

  • பிரஷ்ஷை மாற்றவும்

உங்கள் பிரஷ் என்னதான் புதிது போல் இருந்தாலும் கட்டாயம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுங்கள்.  இல்லாவிட்டால் வாயில் பாக்டீரியாக்களின் அளவு அதிகரித்து வாய் நாற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

  • மொத்த ப்ளாஷ்

மௌத் ப்ளாஷ்ஷை உபயோகியுங்கள்.  இதன் மூலம் பற்களின் இடுக்குகளில் தங்கியுள்ள சிறு உணவுத் துகள்களை வெளியேற்றி விடலாம்.  ஆனால் இதை யாரும் பயன்படுத்துவதில்லை.  தினந்தோறும் செய்ய முடியவில்லை என்றாலும் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது செய்யுங்கள்.  இச் செயல் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தச் செய்கிறது.

  • நாக்கு சுத்தப்படுத்தாமல் இருப்பது.

வாய் துர்நாற்றத்திற்கு நாக்குகளின் மேல் உள்ள வெள்ளைப்படலமும் முக்கிய காரணமாகும்.  ஆனால் இந்த செயலையும் மக்கள் பலர் அலட்சியப்படுத்துகிறார்கள்.  இப்படி அலட்சியப் படுத்துவதால், வாய் துர்நாற்றம் வீசுவதை மறைக்க முடியாது.  ஆகவே நாக்கை மறக்காமல் சுத்தம் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.