கடன் தொல்லையால் மனைவியை விற்கப்படுவதாக FB யில் பதிவு

51290757

முகப்புத்தகம் என்றழைக்கப்படும் பேஸ்புக்கில் நிறைய சர்ச்சைகள் தற்போது நடந்தேறிவருகின்றது. ஒரு விதத்தில் இந்த சமூக வலைதளங்கள் நமக்கு நல்லன தந்தாலும் சில சமயம் தீமைகள் அதிகமாக நடந்தேறியுள்ளன்.

குறிப்பாக மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஒரு வாலிபர் தனது மகளையும் தன் மனைவியையும் ஒரு லட்சத்திற்கு விற்கப்போகின்றேன் என்ற போஸ்ட் போட்டுவிட்டுவிட்டார். இவர் கண்டிப்பாக உண்மையாக செய்திருக்க மாட்டார் ஏதோ விரக்தியில இப்படி செய்து விட்டார்.  ஆனால் இந்த விசயம் Sharing மேல் Sharing  செய்யப்பட்டு கடைசியில் பெண்ணின் உறவினருக்கு சென்றுவிட்டது.

அவர்கள் அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு தெரியப்படுத்தினர். பின் இதை தொடர்ந்து காவல் நிலையத்தில் பெண் புகார் கொடுத்துள்ளார்.  புகாரில் தெரிவித்ததாவது கணவர் திலீப் மாலி கடன் வாங்கி செலவு செய்துவிட்டு தன் குடும்பத்தை அவமானப்படுத்தவே இவ்வாறு ஈனச்செயலை செய்துள்ளார்.  இவ்வாறு செய்து விட்டு கார்கோன் மாவட்டத்தில் இருந்து அவரது சொந்த ஊரான இந்தூருக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறியுள்ளார்.

கட்டிய மனைவியை கடனுக்காக விற்கப்போகின்றேன் என்று கூறியுள்ள இந்த செய்தி மிகவும் கொடுமையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.