கலாபவன் மணி சாவில் மர்மம் – பிரேத பரிசோதனை

Kalabhavan Mani6658

நேற்றைய தினம் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த திரு. கலாபவன் மணி என்ற நடிகர் காலமானார்.

புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர் கலாபவன் மணியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் அளித்த புகாரின்பேரில் சாலக்குடி போலீஸார் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மணி, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மிகவும் மோசமான நிலையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய சகோதரர் ராமகிருஷ்ணன், சாலக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனையிலேயே அவரது பிரேதம் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்யப்பட்டன.
அதன் முடிவில், அதிக நச்சுத்தன்மை உள்ள மீதேல் ஆல்கஹால், அவரது ரத்தத்தில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, திருச்சூர் மாவட்டம், சாலக்குடியில் உள்ள மணியின் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மணி அண்மையில் தனது இல்லத்துக்கு அருகே உள்ள தனக்குச் சொந்தமான சொகுசுக் குடிலில் மூன்று நண்பர்களுடன் தங்கியிருந்ததாக போலீஸாருக்குத் தெரிய வந்தது.

போலிஸார் தனிப்படை அமைத்து கலாபவன் மணியின் மரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து, அந்தக் குடிலில் போலீஸார் சோதனை நடத்தினர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலாபவன் இறப்பு குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுவரை 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட கலாபவன் மணி தமிழகத்தில் ஒரு காலத்தில் நம்பர் ஒன் வில்லனாகவும் – குணச்சித்திர வேடதாரியாகவும் பிரபலமாகியிருந்தார். கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ”பாபநாசம்” படத்தில் அடாவடியான போலிஸ் எஸ்ஐ ஆக நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.