ஐந்து ஆண்டுகளுக்கு பின் நாளை காலையில் முழு சூரியகிரகணம்

images (4)

சூரிய கிரகணம் என்பது புவிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரியன் சற்று மறைக்கப்படும் நிகழ்வு.  அமாவாசை தினத்தன்று தான் சூரிய கிரகணம் நிகழும். இதனால் சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியோ மறைக்கப்படும்.

ஒரு சில ஆண்டுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சூரிய கிரகணங்கள் வந்து போகும். சில ஆண்டுகளில் சூரிய கிரகணம் நிகழாது.  இந்தியாவில் முழு சூரிய கிரகணம் கடந்த 2010–ம் ஆண்டு ஜனவரி மாதம் 15–ந்தேதி ஏற்பட்டது. நடப்பாண்டில் 2 சூரிய கிரகணங்கள் ஏற்பட உள்ளது. அதன் முதல் சூரிய கிரகணம் நாளை (புதன்கிழமை) நிகழ்கிறது.

இந்தியாவிலன் மணிநேரப்படி நாளையன்று அதிகாலை 4.49 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்குகிறது. இந்தோனேசியா மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்த சூரிய கிரகணம் 100 சதவீதம் தெரியும். இந்தியாவின் பெரும் பாலான பகுதிகளில் பாதி சூரிய கிரகணம்தான் தெரியும். இந்தியாவின் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் இதை காண இயலாது.path-760

சென்னையில் நாளை காலை 6.20 மணிக்கு சூரியன் உதயமாகிறது. 6.22 மணி முதல் 6.48 மணி வரை 26 நிமிடங்கள் சென்னையில் சூரிய கிரகணத்தை பார்க்கலாம். வெறும் கண்களால் பார்க்காமல் floppy Disk -ன் உட்பகுதி மற்றம் வெல்டிங் கண்ணாடி போட்டுக்கொண்டு சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.  அதே போன்று கர்ப்பிணி தாய் மார்கள் வெளியே வரவேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published.