மனமுடைந்த அகதி உயர் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை – பதைபதைக்கும் வீடியோ காட்சி – எச்சரிக்கை : பலவீமடைந்தவர்கட்கு

ravi-300x141

 

அகதிகளாகிவிட்டாலே அவர்களின் பாடு மரணப்பாடுதான். இந்த நிலை உலகத்தில் எந்த நாட்டுக்கும் வந்தாலும் கொடுமை தான்.  அப்பாவி ஈழத்தமிழர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது.

இலங்கை அகதிகளை காப்பாற்ற நம் தமிழக அரசு சில முகாம்களை நடத்தி வருகின்றது.  மதுரைக்கு அருகேயுள்ள கூத்தியார்பட்டு – திருமங்கலம் பகுதியில் ஒரு முகாம் உள்ளது.  இங்கு 450 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை கவனித்து வருகின்றனர். இங்கு அகதிகளின் பாதுகாப்புக்காக தினமும் பெயரேடு எடுக்கப்படும். (Attendance).

அப்போது ரவிச்சந்திரன்(35) என்ற அகதியும் அவரது மகனும் தவறியுள்ளது வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரனுக்கு தெரிய வந்துள்ளது.  பின் ரவிச்சந்திரனும் அவரது மகனும் வந்தப்பின் ராஜேந்திரன் ஏன் காணவில்லை என்று கேட்டுள்ளார்.  அதற்கு ரவிச்சந்திரன் தன் மகனுக்கு உடல் நலம் சரியில்லை அதனால் நான் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றேன்.  அதனால் தான் தாமதம் ஆயிற்று என்று கூறியுள்ளார்.

இதை சற்றும் ஏற்காத அதிகாரி ரவிச்சந்திரன். அவர்களை பெயரேட்டில் ஆப்சன்ட் போட்டுவிட்டு தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளார். ஏற்கனவே உயிரைத்தவிர அனைத்தும் இழந்த இந்த அகதியால் கூறிய திட்டை வாங்கிக்கொள்ள முடியவில்லை. மனமுடைந்து போனார். ரவிச்சந்திரன்.

இதனால் அருகில் உள்ள உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்று இறுதியில் கம்பியின் மீது உடல் உரசவைத்து பரிதாபமாக தற்கொலை செய்துகொண்டார். இதனால் அந்த கூத்தியார்பட்டு அகதிகள் முகாமில் உள்ள அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதிகாரியை தாக்கினர்.

300க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர்.  அகதிகள் ரவிச்சந்திரனின் உடலை வாங்க மறுத்தனர். கலெக்டர் வரவேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.  வருவாய்த்துறை அதிகாரி திட்டியதால் மனமுடைந்த இலங்கை அகதி, மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.