பிரபல கேரள நடிகர் கலாபவன் மணி மதுவில் விஷம் கலந்து மரணம்

hqdefault (1)

கேரளம், தமிழகம் மற்றும் பல மொழி படங்களில் நடித்துவந்த கலாபவன் மணி நடிகரான இவர் தற்போது மரணித்துவிட்டார். மரணமடைந்த பிரபல நடிகர் கலாபவன் மணியின் உடலில் விஷம் கலந்திருந்ததாக  கூறப்படுகின்றது.

கலாபவன் மணி தனது இல்லத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டு இருக்கும் போது திடீரென்று விழுந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திரிச்சூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள். அங்கு இன்று காலை 10 மணியளவில் கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 11 மணிமுதல் பொதுமக்கள் பார்வை அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.

அவரது உடலுக்கு கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, மலையாள திரைப்பட நட்சத்திரங்கள், மோகன்லால், மம்முட்டி, சுரேஸ்கோபி உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக மாலை 5 மணியளவில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற உத்தேசித்து இருக்கின்றார்கள்.

இதனிடையே மறைந்த கலாபவன்மணியின் உடலில் விஷம் கலந்திருந்ததாக அவரை சோதித்த மருத்துவர்கள் காவல்துறையிடம் கூறியதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வில்லன், ஹீரோ, குணச்சித்தர வேடங்களில் நிறைய படங்களில் நடித்து தன் பெயரை வெளிக்காட்டியுள்ளார்.  கேலி கலந்த வில்லன் வேடத்தில் இவரை மிஞ்ச யாருமில்லை. அப்பெருமையை தட்டிச்சென்றவர் கலாபவன் மணி ஆவார்.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=fxweLUSiMbo

Leave a Reply

Your email address will not be published.