மலச்சிக்கலால் இறந்த இளம்பெண்

morning sick

 

எல்லோருக்கும் காலைக்கடன் என்பது மிக சாதாரணமாக நடப்பது கிடையாது.  சிலர் இரவு வாழைப்பழம் சாப்பிட்டால்தான் சீராக போகும் என்பார்கள்.  சிலர் டீ குடித்தால் தான் சீராக போகும் என்பார்கள்.  ஆனால் இவை யாவுமின்றி காலையில் உங்களுக்கு மலம் சீராக கழிக்க வேண்டும்.  எந்த பிரச்சிidயும் கஷ்டமும் இன்றி கழிக்க வேண்டும்.  இப்படி நடந்தால் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.  நீங்கள் சிறுநீரை அடக்குகின்றீர்களா?  அப்ப கட்டாயம் இந்த கட்டுரையை படியுங்கள்.  அதே போல் தொடர்ந்து மலச்சிக்கல் ஏற்பட்டு வந்தால் உங்கள் உடலிலும், உணவுப் பழக்கத்திலும் ஏதோ தவறு நடந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.  இதில் என்ன இருக்கிறது என்று அலட்சியமாக இருந்து விட வேண்டாம்.  16 வயது நிரம்பிய எமிலி என்ற ஐரோப்பிய பெண் மலச்சிக்கல் காரணமாக தனது உயிரையே இழந்துள்ளார்.

  • எமிலி டிட்டெரிங்டன் (Emily Titterington)

எமிலி டிட்டெரிங்டன், 16 வயது நிரம்பிய இளம் பெண்.  இவர் இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் எனும் பகுதியில் வசித்து வந்தார்.  மலச்சிக்கல் காரணமாக இரண்டு மாதமாக மலம் கழிக்க முடியாமல் அவஸ்தைப்பட்டு வந்தார்.  பின் எமிலி பரிதாபமாக மரணமடைந்தார்.

  • இதயம் செயலிழந்தது.

கடுமையான மலச்சிக்கலால் கஷ்டப்பட்டு வந்தார்.  இவருக்கு இதயம் வேலை செய்யவில்லை.  இதனால் அவர் பரிதாபகரமாக மரணமடைந்தார்.  இதற்குக் காரணம் கடுமையான மலச்சிக்கல்தான்.  இந்தப் பிரச்சினையினால் உடலின் மற்ற பாகங்கள் பெரியதாக ஆனது.  இதயம் சுருங்கியது.  இதனால் எமிலி உயிர்விட நேர்ந்தது.

  • எமிலியின் உடல்நிலை.

எமிலி கொஞ்சம் மதி இறக்கம் கொண்டவர் ஆவார்.  இவருக்கு குடல் பிரச்சினை இருந்தது.  கடுமையான வலி இருந்தது.  மற்றும் பல பிரச்சனைகளும் இருந்தது.  இதையெல்லாம் அவர் யாரிடமும் வெளியே சொல்லவில்லை.  இதற்குக் காரணம் அவரது மதி இறக்கம்தான் என்று டாக்டர் அமன்டா ஜெப்ரி கூறியுள்ளார்.

  • மலத்தை அடக்கிய எமிலி.

குடல் பிரச்சினையால் கடுமையான வலியில் அவஸ்தைப்பட்டார் எமிலி.  தினமும் மலம் கழிக்கச் செல்கிறார்.  டாய்லெட்டுக்கு சென்றதும் வலியின் காரணமாக மலத்தை அடக்கி வைத்திருந்து மலம் கழிக்காமல் வந்திருக்கிறார்.  இதுதான் எமிலி உயிர் விடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

  • குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்சனை

பெரும்பாலான குழந்தைகள் மலம் கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்ளும் பண்புடையவர்களாக இருக்கிறார்கள்.  இதனால் அவர்களுக்கு வலி ஏற்படுகிறது.  அதை அவர்கள் வெளிப்படுத்த தெரிவதில்லை.  இதன் காரணமாக மற்ற உடல் பாகங்களுக்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்று தெரிவிக்கிறார் குழந்தைகள் நலன் மருத்துவரான டாக்டர் ராய்னா க்ரோத்.

  • தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய எமிலியின் மரணம்.

எமிலிக்கு குடல் பிரச்சினை இருந்திருக்கிறது.  இதனால் மலச்சிக்கல் பிரச்சினை வந்திருக்கிறது.  இவர் தனக்கு வலியை டாக்டரிடம் சரியான நேரத்தில் தெரியப்படுத்தியிருந்தால் சரியான சிகிச்சை அளித்து குணப்படுத்தி இருக்கலாம்.  இந்நேரம் எமிலி நம்மோடு உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று சொல்கிறார் எமிலியின் உடல்நல மருத்துவர் ஜேம்ஸ்.

  • மருத்துவரை தவிர்த்து வந்த எமிலி

வீட்டில் பல தடவை மருத்துவரை பார்க்கவும், ஆஸ்பத்திரிக்குச் செல்லவும் அழைத்தும் கூட எமிலி மறுத்திருக்கிறார்.  தனக்கு ஒன்றுமில்லை என்பது போல இருந்திருக்கிறார்.  குழந்தை மனம் மாறாத பெண் என்பதால் என்னவோ, தன் மன நிலையின் காரணமாகவே இறந்து விட்டார்.

  • மருத்துவர்கள் கருத்து.

மலச்சிக்கலை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.  உங்கள் உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றும் செயல்தான் இது.  இதில் தடை ஏற்பட்டால் கழிவுகள் உங்கள் உடலிலேயே தங்கிவிடும்.  இதனால் பல உடல் நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கிறது.  இது உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கும் ஆபத்து உள்ளது.  ஆகவே உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மீது இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.