உளுந்து இருந்தால் எலும்பு தப்பும்

download (8)

எலும்பு இல்லையெனில் வெறும் சதைதான் மீதமிருக்கும். கட்டிடம் கட்டும்போது உருவாக்கப்படும் தூண் வலிமையாக இருக்க காரணம் இதன் உள்ளிருக்கும் கம்பிகள் தான்.  அதே போல் தான் உள்ளிருக்கும் எலும்பு தான் மனித உடலின் உறுதிக்கும் காரணம்.

எலும்பை வலுவாக வைத்துக்கொள்வது மிக முக்கியமானது.  எலும்பு ஒரு வேலை பலவீனமாக இருந்தால் சிறு விபத்து ஏற்பட்டால் கூட உடனே எலம்பு முறிவு ஏற்பட்டுவிடும்.  அல்லது எலும்பு உடைந்து விடும்.

எலும்பு வளர முக்கிய சத்து கால்சியம் தான்.  கால்சியம் நிறைந்த உணவுகள் எலும்பை வளர்ச்சியை அதிகரிக்கும்.  உளுந்து எலும்பை வலிமையாக்கும்.  இது எலும்பினை நெருக்கமாக வளர வைத்து விடும்.  வலிமையானதாகவும் மாற்றும்.

தினமும் காலையில் எழுந்து உளுந்தை ஒரு கைப்பிடி எடுத்து தண்ணீரில் ஊற வைத்து விட்டு பின் அரைமணி நேரம் கழித்து எடுத்து பனைவெல்லம் சேர்த்துக்கொண்டு சாப்பிட வேண்டும். இதனால் ஆரோக்கியமாக இருக்கும். எலும்பில் ஏற்பட்டுள்ள அனைத்து பாதிப்புகளும் நீங்கி விடும்.

உளுந்தை வறுத்துவிட்டு அதில் சுக்கு மற்றும் பனைவெல்லத்தை கலந்து நன்றாக அரைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.  தினமும் காலையில் அல்லது மாலையில் வெந்நீரை கொதிக்க வைத்து அதில் இந்த மாவைப் போட்டு நன்றாக கிண்டி பின் அதை சாப்பிட கொடுக்க எலும்புக்கு ஊட்டச்சத்தாகும்.

உடற்பயிற்சி செய்து வருபவர்களுக்கு உளுந்து மிக சத்துள்ளதான உணவாகும்.

Leave a Reply

Your email address will not be published.