குழந்தை கருவில் இறந்துவிட்டதை எப்படி கண்டுபிடிப்பது?

aborted-foetus-six-months-songkran-niyomsane-forensic-medicine-museum-siriraj-medical-museum-bangkok-thailand

கர்ப்பம் தரித்த பெண்களுக்கு ஏற்படும் இரண்டு பிரச்சினைகள் ஒன்று கருச்சிதைவு இது கர்ப்பம் தரித்த 5 மாதங்களுக்குள் வருவது.  இந்த கருச்சிதைவு என்பது கரு குழந்தையாக மாறுவதற்கு முன்னால் சிதைந்து விடும்.  இது வெளியே வந்துவிடும்.

இரண்டாவது பிரச்சினை 5 மாதங்களுக்கு பின்னர் வயிற்றில் வளரும் குழந்தை இறந்து விடுவது. குழந்தை இறந்தாலும் இது தாயின் கருவறைக்குள்ளேயே இருக்கும் தெரியாது.  இவ்வாறு குழந்தை இறந்துவிட்டதற்கான அறிகுறிகள்

குடும்பத்தில் உள்ள யாருக்கேனும் இதுபோல் கருவில் உள்ள குழந்தை இறந்து கொண்டே இருந்திருந்தால் இது போன்று கருவானது சிதைந்து போக வாய்ப்புண்டு.  அதே போல் நோய்க்கிருமிகள் தொற்றி கருவில் வளரும் குழந்தை இறந்து போக வாய்ப்புண்டு.  போதிய பிராணவாயு கிடைக்காமல் தாயின் தொப்புள்கொடியில் முடிச்சு மற்றும் அடைப்பு ஏற்பட்டு குழந்தை இறக்க வாய்ப்புண்டு.

தாய்மார்கள் கருவில் குழந்தையை சுமக்கும் போது தீய பழக்கங்களான போதைப்பழக்கம், குடிபழக்கம், புகைப்பழக்கம் இருந்தால் கண்டிப்பாக குழந்தைக்கு மரணத்தை ஏற்படுத்திவிடும்.

40 வயதுக்கு மேல் கருவுற்றிருக்கும் தாய்மார்கள் கருவை வளர வைக்க போதுமான சக்திகள் இல்லாத காரணத்தால் கருவானது இறந்துவிட வாய்ப்புண்டு

அறிகுறிகள்

6 மாதக்குழந்தை கருப்பையில் இறந்து விட்டது என்பதை கண்டறிவது கடினம் தான் இதனால் கருவுற்ற காலத்தில் இருந்து தொடர்ந்து மருத்துவரை அணுகி வாரம் ஒரு முறை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதனால் கருவானது வளர்ச்சியுடன் இருக்கின்றதா என்று கண்டறியலாம்.

கர்ப்பகாலத்தில் அதுவும் 5 மாதம் கழித்து மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அடிவயிற்றில் கொடுமையான வலி, உதிரப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.  தாமதிக்க வேண்டாம்.

குழந்தை 6 மாதம் முழுமையடைந்த பின்னர் உதைக்க ஆரம்பிக்கும்.  அல்லது அசையும் அவ்வாறு எவ்வித அசைவும் இல்லாமல் இருந்தால் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிக கொழுப்பான உணவுகளையும் உட்கொள்ளக்கூடாது, அதிக எண்ணெய்ப்பொருட்களையும் உட்கொள்ளக்கூடாது. அதே சமயம் விரதம் கடைப்பிடிக்கக்கூடாது.  இதனால் தாய் பட்டினியாக கிடந்தால் குழந்தையும் பட்டினியாக இருக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வாகனத்தில் வெகுதூரம் பயணம், கடினமான வேலை, குதித்தல் போன்றவைகளை சற்று தள்ளி வைத்தல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.