கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்

dieta-carbohidratos-nadadores-triatletas

சரியான விகிதத்தில் கார்போஹைட்ரேட் உணவுகள் எடுத்துக் கொள்ளவேண்டியது உடல் நலத்திற்கு அவசியமானதாகும்.  அதே சமயத்தில் உடல் இயங்குவதும் கட்டாயமானதாகும்.  மதில் மேல் பூனை போல் கார்போஹைட்ரேட் உணவுகளை குறைவாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது.  அதிகமாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது.  அமிர்தம் அதிகமாக சாப்பிட்டால் நஞ்சு என்று நமது முன்னோர்கள் சொல்வார்கள்.  அதைக் கருத்தில் கொண்டு சரியான உணவு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு தான் கார்போஹைட்ரேட் உணவுகள்.  இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் உங்கள் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.  தானிய உணவுகள், வெள்ளை அரிசி சாதம், வெண்ணெய் பழம் (Avocado). உருளைக் கிழங்கு போன்றவை சிறந்த கார்போஹைட்ரேட் உணவுகள் என்று சொல்லப்படுகிறது.  கார்போஹைட்ரேட் உணவுகள் கணிசமாக குறைத்துக் கொள்வதால் உங்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் பார்ப்போம்.  இறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் ஆரோக்கியமான நன்மைகள் கி்டைக்கின்றன.

கார்போஹைட்ரேட் உணவுகள் சாப்பிடுவதை குறைப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

  1. உடலில் நீரின் எடை குறையும்.

நீங்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்து சாப்பிட்டு வருகிறீர்கள்.  இதனால் உங்கள் உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு கணிசமாக குறைகின்றது.  ஆகையால் உடலில் தண்ணீரின் அளவு அதிகரிக்க சரிவிகித உணவு சாப்பிடுங்கள்.

  1. ஃபுளு காய்ச்சல்

மூளைக்கு முக்கியமான சக்தி கார்போஹைட்ரேட் ஆகும்.  நீங்கள் சரிவிகித அளவில் கார்போஹைட்ரேட் உணவுகள் சாப்பிடுவதை குறைக்கும் போது, மூளைக்கு சக்தி கிடைக்காமல் போகிறது.  இதனால் சோர்வுறும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.  இதனால் சோர்வுறும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.  இதனால் கிளைக்கோஜன் அளவு குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.  மற்றும் இதனால் கொழுப்புகள் அதிகமாக குறையும்.

விளைவுகள்  ஃப்ளு காய்ச்சலின் விளைவுகளால் வாய் வறட்சி, வாய் துர்நாற்றம், உடல் வலிமை குறைவு, சோர்வு, குமட்டல், தூக்கமின்மை போன்றவைகள் ஏற்படக் கூடும்.

  1. பசி

இரத்த சர்க்கரை அளவை கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகரிக்கச் செய்கின்றன.  ஆனால் நீங்கள் இந்த உணவுகளை முழுவதுமாக தவிர்க்கும் பொழுது, பசி அதிகமாவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன.  எனவே இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.  உங்கள் பசி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பசியின்மைக்கு நார்ச்சத்து உணவுகள் தீர்வளிக்கக் கூடியது.

  1. நீரிழிவு மற்றும் இதயப் பிரச்சனை,

கார்ப்போஹைட்ரேட் உள்ள சில தானிய உணவுகளை நீங்கள் தவிர்ப்பதனால் நீரிழிவு சார்ந்த பிரச்சனைகளும் மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளும் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.  அதிலும் குறிப்பாக டைப் 2 நீரிழிவு அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் தான் அதிகம் இருக்கின்றன.  தானியங்கள் உடல் பருமன்,  நீரிழிவு மற்றும் இதயம் போன்றவைகளிலிருந்து பாதுகாக்கக் கூடிய உணவுகள் ஆகும்.  எக் காரணத்தை முன்னிட்டும் இந்த உணவுகளை தவிர்த்தல் வேண்டாம்.

  1. எனர்ஜி குறையும்.

கார்ப்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பதால் உங்கள் உடலின் சக்தி குறையும்.  தானிய உணவில் இருக்கும் மெக்னீசியம், வைட்டமின் பி, இரும்புச்சத்து போன்றவை தான் நமது உடலின் சக்தியை பாதுகாக்கின்றன.  ஆகவே தானிய உணவுகளை தவிர்ப்பது தவற.

  1. மலச்சிக்கல்

தானிய உணவுகளில் இருக்கும் நார்ச்சத்து உங்கள் ஜீரணத்தை சீராக்குகிறது.  மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது.  தானிய உணவுகளை நீங்கள் தவிர்க்கும் பொழுது தான் மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன..

  1. மனநலம் அதிகரிக்கும்.

நீங்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை சரியான முறையில் சரிவிகித அளவில் சாப்பிட்டு வந்தால் உங்களுடைய மனநிலை மேன்மையடையும்.  மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும்.

Leave a Reply

Your email address will not be published.