திருமணம் செய்து கொள்வதாக கூறி கம்ப்யூட்டர் என்ஜினியர்களை ஏமாற்றிய நடிகை

download (7)

கோவையைச் சேர்ந்த இளம் நடிகை சுருதி(21). இவர் இணையதளத்தில் நிறைய கணினி மென்பொருள் பொறியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மணமுடிக்கின்றேன் என்று பல லட்சம் ஏமாற்றி பெற்றுள்ளார்.

இணையதள திருமண தகவல் மையத்தில் விண்ணப்பித்த வரன் தேடி விண்ணப்பித்த பணக்கார வாலிபர்களை தொடர்பு கொள்ளும் இவர் திருமணம் செய்ய விருப்பம் உள்ளதா கூறுவாராம்.பின்னர் அந்த வாலிபர்களுடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்வாராம். பின்னர் அந்த வாலிபர்களை அழைத்து ஷாப்பிங் சென்று ஆடம்பரமான பொருட்களை வாங்கி லட்சக்கணக்கில் பணம் கறப்பது இவரது வழக்கம்.

இவரிடம் நாமக்கல்லை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சந்தோஷ்குமார், சிதம்பரத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் அருள்குமரகுரு ராஜா ஆகியோர் லட்சக் கணக்கில் பணத்தை பறிகொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட இவர்கள் போலீஸாரிடம் புகார் கொடுத்தனர். இந்த விவகாரம் குறித்து கோவை நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுருதியின் மோசடி வலையில் பல கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் பணத்தை இழந்து இருப்பதும், சுருதி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

போலீஸாரின் விசாரணையை அறிந்த சுருதி நீதிமன்றத்தில் கைது செய்யக் கூடாது என்று தடை உத்தரவு பெற்றார். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, சுருதியை திருமணம் செய்யும் ஆசையில் பல என்ஜினீயர்கள் ரூ.2 கோடிவரை பணத்தை இழந்து இழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.தற்போது அவர் பெற்றுள்ள தடை ஆணையை நீக்கக்கோரி நீதிமன்றத்தில் கோர உள்ளோம். மேலும் சுருதிக்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்..

மேலும் சுருதி குறித்து விசாரனை நடத்தியதில் அவர் சினிமா நடிகை என்பது தெரியவந்தது. திரைக்கு வராத 2 தமிழ்ப் படங்களில் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரை கைது செய்தால் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்ப்படுகிறது. சுருதியிடம் லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த இன்ஜினியர் சந்தோஷ்குமார் கூறியபோது,

நான் வரன் தேடுவதற்காக ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தேன். மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் போன்ற விவரங்களை பதிவேற்றினேன். இதனைக் கண்ட சுருதி போனில் என்னை தொடர்பு கொண்டார். உங்களை திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார். பின்னர் நிச்சயதார்த்தமும் செய்துகொண்டோம். நிச்சயத்திற்கு பின்னர் சுருதி அடிக்கடி ஷாப்பிங் செல்ல வற்புறுத்தினார். அவ்வாறு சென்றாலும் அங்கு விலை உயர்ந்த பொருட்களையே வாங்கினார்.

இந்நிலையில் திடீரென ஒரு நாள் தனக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை பெற வேண்டியிருப்பதாகவும் சுருதியின் தாய் கூறினார். இதனால் கவலை அடைந்த நான் மருத்துவ சிகிச்சைக்காக சுருதியின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் அனுப்பினேன். சில நாட்களுக்கு பின்பு அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த நான் எமாற்றப்பட்டதை அறிந்துகொண்டேன். மேலும் என்னை போன்று பலரிடமும் அவர் பணம் கறந்ததும் தெரியவந்தது என்றார்.

தன் அழகை காட்டி கம்ப்யூட்டர் என்ஜினியர்களை தன் வலையில் சிக்க வைத்த பணத்தை பறித்து விட்டு ஏமாற்றிய இச்சம்பவம் மிகுந்த வேதனையளிக்கக்கூடியது.

Leave a Reply

Your email address will not be published.