வீட்டு வேலைக்காரியை மாடலிங் பெண்ணாக மாற்றிய ஆடை வடிவமைப்பாளர்

download (6)

நம்ம ஊரில் இருக்கும் டைரக்டர்களான பாரதிராஜா, பாண்டிராஜ் போன்றவர்கள் வயல்களில் வேலைசெய்பவர்களையும், வீட்டில் வேலை செய்யும் பெண்களையும் படத்தில் நடிக்க வைத்து பெரிய ஆளாக்கியிருக்கின்றார்கள். அதேபோல் இப்போது இந்தி உலகத்திலும் நடந்திருக்கின்றது.

பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் மன்தீப் நாகி தன்னுடைய புது ஆடைகளை பிரபலப்படுத்த வீட்டு வேலை செய்யும் பணிப் பெண் ஒருவரை மாடலாக தேர்ந்தெடுத்துள்ளார். தனது புதிய ஆடைகளை பிரபலப்படுத்த மாடலாக தன் வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த பெண் 2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணாவார். இது குறித்து வடிவமைப்பாளர் மன்தீப் நாகி கூறுகையில், எங்களுடைய புதிய ஆடைக்கு நான் ஒரு புதிய மாடலை எதிர்பார்த்தேன்.

என் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் கமலா இருந்தார். நான் முதலில் என் ஆசையை கமலாவிடம் கூறினேன். அவர் இதுபற்றி யோசிக்க ஒரு நாள் அவகாசம் கேட்டார். பின்னர் அவர் மாடலாக பணியாற்ற சம்மதம் தெரிவித்தார். தான் அணியப் போகும் ஆடைகள் மற்றும் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றி கேள்வி எழுப்பினார்.

அதைப் பற்றிய முழுதான விளக்கத்தை அளித்த பின்னர் அவர் முழுமனதுடன் மாடலிங்கிற்கு தயாரானார். இதையடுத்து நாங்கள் புகைப்படம் பிடிக்கும் வேலைகளை தொடங்கினோம். அவருக்கு சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்தோம். முதலில் கேமராவை பார்த்து தயங்கிய அவர், சிறிது நேரத்தில் தயக்கமின்றி போஸ் கொடுத்து உதவினார். எனவே புகைப்படங்கள் அருமையாக வந்துள்ளது. மாடலிங் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.