புற்று நோய் மருத்துவத்தில் புதிய முன்னேற்றம்

cancer

புற்று நோய் பெரும்பாலும் குணப்படுத்த முடியாத நோயாகவே உலகம் முழுவதும் கருதப்படுகிறது.

புற்று நோய் கிருமிகள் மற்றும் அதற்கான அழிப்பு மருந்துகளிலும் அதிக வீரியம் பெறுவது எப்படி என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புதிராகவே இருந்து வந்திருக்கிறது.  இந்த கால கட்டத்தில் புற்று நோயை குணப்படுத்த புதிய வழிமுறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் டக்ளஸ் பியர்சன், ஷீலா ஜோன் ஸ்மித் ஆகிய இருவரும் புற்று நோய்க் கட்டிகளில் உள்ள புற்று வைத்த திசுக்களை அழிக்கவும் பரவாமல் தடுக்கவும் நோயாளிகளை குணப்படுத்த செலுத்தப்படும் ஊசி மருந்தும் இதர சிகிச்சை முறைகளும் வெற்றி கொள்வது எப்படி என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

புற்று நோய் பாதித்த திசுக்களுக்கு செல்லும் மருந்தின் வீரியத்தை குலைத்து அதை வேலை செய்ய விடாமல் தடுக்கும் கூட்டுத் திசுக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இது குறித்த ஆய்வொன்றில் பரிசோதனைக் கூடத்தில் எலிகளுக்கு புற்று நோயை உண்டாக்கினர்.  பின்னர் பாதிக்கப்பட்ட திசுகளுக்கு செல்லும் மருந்து வேலை செய்யாமல் தடுக்கும் செல்களை அடையாளம் கண்டனர்.  பின்பு தனிமைப்படுத்தி அவற்றை கொன்றனர்.  அதன் பிறகு மருந்து வேகமாக வேலை செய்து புற்று நோய் செல்கள் அழிக்கப்பட்டு நோய் குணமானது.  இதை மனிதர்களுக்கு விரிவு படுத்துவதற்கு முன்னர் மேலும் சில முறை சோதனை நடத்தி உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.

புற்று நோய் பாதித்த நோயாளிகளின் புற்றுக் கட்டிகளில் எப்.ஏ.சி. என்கிற அந்த ஸ்ட்ரோமல் செல்கள் இருப்பதை லாயிட் ஓல்ட் என்ற விஞ்ஞானியும் அவருடைய சகாக்களும் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்துள்ளனர்.  ஆனால் அதுதான் மருந்தை இயக்க விடாமல் தடுக்கிறது என்பதை லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் டக்ளஸ் பியர்சன்,ஷீலா ஜோன் ஸ்மித் ஆகியோர் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு புற்று நோய் ஆய்விலும் மருத்துவத்திலும் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.