குடி போதையில் மயங்கி விழுந்த பள்ளி மாணவர்கள்

article-2256406-139698BE000005DC-684_634x402

சீர்காழி அருகே அரசு பள்ளி மாணவர்கள் குடி போதையில் சாலையில் விழுந்துகிடந்தனர். 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் காலை இடைவேளை நேரத்தில் பள்ளியை விட்டு வெளியேறி அருகில் உள்ள அரசு மதுபான கடையில் மதுவை குடித்தாக கூறப்படுகிறது. மது போதையில் மாணவர்கள் தெற்குமாட வீதியில் சாலை ஓரம் மயங்கி விழுந்துகிடந்தனர்.

காலை 12 மணி முதல் சாலையோரம் கிடந்த மாணவர்கள் பின்னர் அருகில் இருந்த கடை வாசலில் படுத்தனர். மாணவர்கள் மது போதையில் மயங்கி கிடந்தனர். இது குறித்து காவல் துறையினர் மாணவர்களிடம் விசாரித்து அவர்கள் வீட்டுக்கு தகவல் அளித்த பின்னர் மாணவர்கள் ஆட்டோவில் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.