தேனிலவுக்கு சென்ற புதுமணப்பெண் காதலுடன் ஓட்டம்

download (5)

தேனிலவுக்கு சென்ற இடத்தில் புதுமணப்பெண் தன் பழைய காதலனோடு சென்றுவிட்டார். 

சென்னையில் சவுகார்பேட்டை ராஜ்கமல் என்பவருடைய மகள் வர்ஷாவை (23) அம்பத்தூரைச் சேர்ந்த நேமிசந்த் மகன் விக்னேஷ் (24) கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

கல்யாணம் ஆன நாள் தொட்டே தன் பழைய காதலைப்பற்றி வர்ஷா கூற முயன்றுள்ளார். தன்னை அவருடன் அனுப்பும் படி கேட்டுள்ளார். விக்னேஷ் சமாதானப்படுத்தியுள்ளார்.  மனமாற்றம் அடைவதற்காக கொடைக்கானலுக்கு இன்பச்சுற்றுலா வந்துள்ளனர்.

ஆனால் வர்ஷா தன் காதலனை வரச்சொல்லி கணவன் தூங்கும் நேரத்தில் காதலனுடன் சென்றுவிட்டார். பின் தொலைபேசியில் அழைத்து தான் காதலனுடன் சென்றுவிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் தன் பெற்றோருக்கும் இதை தெரியப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.