பிறவிகுணம் மாறுபடுதவது எதனால்

birth habbits

 

இந்த மானிட உலகில் பிறந்த ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனிப்பட்ட ஒரு சில பிறவி குணாதிசயங்கள் இருக்கும்.  பிறவி குணாதிசயங்களை என்ன செய்தாலும் நீக்க முடியாது.  நாம் வளர்கின்ற போது நம்மோடு சோ்ந்து வரும் குணாதிசியங்களை கூட மாற்றி விடலாம்.  ஆனால் நமது பிறவியோடு வரும் குணாதிசயங்கள் மரபணுவோடு தொடர்பு உடையவைகள் ஆகும்.  அவற்றை மாற்றுவது அவ்வளவு ஈஸியல்ல.  ஒரு சில சந்தர்ப்பங்கள் உங்களுக்கு ஏற்படும்பொழுது அந்த பிறவி குணாதிசியங்களும் கூட மாறி விடுகின்ற நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  உதாரணமாக மிகவும் தைரியசாலியாக வலிமை மிக்க நபராக இருந்திருப்பார்.  ஆனால் திடீரென ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அல்லது விபத்தை நேரில் கண்ட பிறகு மொத்தமாய் ஆளே மாறியிருப்பார்.  இது போல ஆறு சம்பவங்கள் உங்கள் வாழ்வில் ஏற்படும் பொழுது, உங்கள் பிறவி குணாதிசயங்களையே மாற்றி விடும் என்று கூறுகின்றார்கள்.  உலக நாடுகளில்  சில விசித்திரமான பழக்க வழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன. பிறவி குண நலன்களையே மாற்றி விடும் தன்மையுள்ள ஆறு விஷயங்கள்.

  1. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

ஆச்சரியமூட்டும் தகவல்களைத் தருவதுமட்டுமில்லாமல் வியப்பை அளிக்கும் சில தகவல்களையும்  ஆய்வுகள் தெரிவிக்கின்றன..  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டபிறகு, உறுப்புக்கள் தானம் பெற்றுக் கொண்ட நபர்களின் குணாதிசயங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.  தங்களது குணாதிசயங்களில் மாற்றங்கள் தென்படுகின்றன என்று அந்த நபர்களே தெரிவிப்பதுதான் ஆச்சரியத்தின் உச்சமாய் இருக்கிறது.

  1. பெண்களின் அண்டவிடுப்பின் போது

பெண்களுக்கு அவர்களது அண்டவிடுப்பின் (Ovulation) போது, உச்சமடையும் போது, அவர்களின் குணாதிசயங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றது..  மற்றும் அவர்களது குரலிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது.  மேலும் உடல்மொழி போன்றவற்றில் ஆச்சரியமூட்டும் வகையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

  1. மூளை அறுவை சிகிச்சை

நமது உடலில் மிகவும் சிக்கலான ஒரு பகுதி மூளை என்று சொன்னால் அது மிகையாகாது.  உங்களைப் பற்றிய மொத்த விபரமும் அடங்கிய ஸ்டோரேஜ் பகுதியே மூளை தான். மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது பிறவி குணாதிசயங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றது..  மனோபாவம், மன நிலை மற்றும் சிறுசிறு செயல்பாடுகளில் சிறிய அளவிலான மாற்றங்கள்  தென்படுகின்றது.

  1. வேலையில்லா பட்டதாரிகள்.

வேலைபார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சில காரணங்களால் வேலையை இழந்தவர்கள், அதிக நாட்களாக வேலை இல்லாமல் இருந்தவர்கள் போன்றவர்களுக்கு அவர்களது பிறவி குணாதிசயங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றது.  இதற்குக் காரணம் அவர்களுக்குள் ஏற்படும் மன உளைச்சலும், மன அழுத்தமும் தான் என்று  கூறப் படுகிறது..

  1. தொற்றுகள்

நோய் தொற்றுகள் ஏற்பட்டு உடல்நலம் பாதிப்படைந்த சிலருக்கு, அதிலிருந்து மீண்டு வெளியே வரும் பொழுது அதிகமான குணாதிசய மாற்றங்கள் ஏற்படுகின்றன.  மற்றும் இவர்கள் சகஜ நிலைக்கு திரும்ப சில கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  பெரும்பாலும் புலன் உணர்வு குறைவு, மனநல மாற்றம் மற்றும் குணாதிசயங்களில் மாற்றம் போன்றவை ஏற்படுகிறதாம்.

  1. மாயத் தோற்ற காளான் (Psychedelic Mushrooms / Magic Mushrooms)

மாயத் தோற்ற மருந்து (Drug) எனப்படும் Psychedelic Mushrooms /Magic Mushrooms உட்கொள்பவர்களுக்கு பிறவி குணாதிசயங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறதாம்.  பொதுவாகவே போதை மருந்து பழக்கத்தி்ற்கு அடிமையாகியுள்ள நபர்களுக்கு அவர்களது பிறவி குணாதியங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published.