பைத்தியத்தை கேப்டனாக வைத்துக்கொண்டு இந்தியாவை வெல்ல முடியாது – பாக் டிவி நடிகை

201603011735579730_Qandeel-Baloch-slams-Afridi-for-for-humiliating-loss-against_SECVPF

மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு பின் பாக் மற்றும் இந்தியாவிற்கு இடையே எந்த விதமான நட்பு ரீதியான போட்டியும் நடைபெறவில்லை.  இதற்காக பாக் பல முறை இந்தியாவை சீண்டியது. ஆனால் இந்தியா ஒரே அடியாக மறுத்து வந்தது.  ஆனால் ஆசிய கோப்பையில் கட்டாயம் விளையாட வேண்டிய சூழ்நிலை உள்ளதால் இரண்டு அணியும் பங்கேற்றது.  பலத்த எதிர்பார்ப்புகளையும் கொண்டதாக இந்த கிரிக்கெட் போட்டி அமைந்தது.

இந்தப் போட்டியானது வங்க தேசத்தில் உள்ள டாக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.  ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது கிரிக்கெட்டை வைத்துத்தான் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் தேசபக்தியை வெளிப்படுத்துகிறார்கள் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் அந்த நாட்டில் பெரும் “பிரளயமே” வெடித்துள்ளதாம்.

லாகூரில் பல இடங்களில் கும்பலாக கூடி போட்டியை ரசித்துப் பார்த்த ரசிகர்கள் பாகிஸ்தான் தோற்றுப் போனதால் கோபமடைந்து டிவி பெட்டிகளை அடித்து உடைத்தனர். வீரர்களுக்கு எதிராகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும் அந்த நாட்டு ரசிகர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். பல இடங்களில் வழக்கம் போல கொடும்பாவிகளையும் எரித்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த நாட்டு டிவி நடிகை குவான்டீல் பலூச் என்பவர் ரொம்ப காட்டமாக திட்டியுள்ளார் கேப்டன் அஃப்ரிடியை. பைத்தியம் என்று திட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சொல்லலை. இந்த மாதிரி பைத்தியத்தை கேப்டனாக வைத்துக் கொண்டு நாம் எதையுமே வெல்ல முடியாது. விரைவில் உலகக் கோப்பை வேறு வருகிறது இப்படிப்பட்ட நிலையில் நமது அணியின் நிலையைப் பாருங்கள். வெட்கமாக இல்லை. அவமானமாக இருக்கிறது எனக்கு என்று ரொம்பவே அக்கறை படுவது போல் பாவலா காட்டியுள்ளார் குவான்டீல். இவர் ஏற்கனவே பிரதமர் மோடியை அவமரியாதையாகப் பேசி மிரட்டி வீடியோவில் பேசி அது பேஸ்புக்கில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published.