மனநலம் பாதித்த குழந்தையை பெற்ற தாய் வீசியெறிந்த பரிதாபம்

முட்புதர் ஒன்றில் பெற்ற தாயே தனது இரண்டு வயது குழந்தையை முட்புதரில் வீசிவிட்டு தலைமறைவானார்.
திருநெல்வேலி மாவட்டம் (நெல்லை) ராதாபுரத்தின் அருகில் பட்டர்புரம் என்ற கிராமம் இருக்கின்றது. இந்த கிராமத்தில் முட்புதர் ஒன்றில் இரண்டு வயது குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டிருக்கின்றது. இது பற்றி அதைப்பார்த்த மக்கள் காவல் நிலையத்திடம் புகார் கொடுத்துள்ளனர்.
காவலர்கள் அக்குழந்தையை மீட்டு ராதாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கி வருகின்றனர். இந்தக்குழந்தை மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையாக உள்ளது. இக்குழந்தை அந்த தாய் மனமுடைந்து தூக்கி வீசிவிட்டு சென்றாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் வீசி சென்றாரா என்ற இரு கோணத்தில் தாயை தேடி வருகின்றனர்.
பெற்ற தாயே மனநிலை சரியில்லாத குழந்தையை முட்புதரில் வீசிவிட்டு சென்ற செயல் மிகவும் சோகமடைய வைக்கின்றது.
Leave a Reply