தேன் சாப்பிடுங்கள் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்

download (3)
தேன் என்பது முக்கியமான மருந்து, இந்த தேன் மருத்துவ குணம் வாய்ந்தது. ஒவ்வொரு தேனும் ஒவ்வொரு விதமான பலனைக்கொண்டிருக்கும். வேப்பம்பூவின் தேன் வேப்பின் மருத்துவகுணங்களை கொண்டிருக்கும்.  முருங்கைப்பூவின் தேன் இரும்புச் சத்து நிறைந்ததாக கொண்டிருக்கும்.
தேனியானது பூக்களில் உள்ள தேளை உறிஞ்சி வயிற்றுக்குள் வைத்து திரவத்தை கலப்பதின் மூலம் தேன் மருத்துவகுணம் வாய்ந்ததாக மாறுகின்றது.
01. தேனை உடல் மெலிய பயன்படுத்தலாம்.  தினமும் தேனை வெந்நீருடன் கலந்து பருகினால் உடலை மெலிய வைத்துவிடும். 
02  தேனுடன், எலுமிச்சை பழத்தை பிழிந்து சர்பத் தயாரித்து குடித்தால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம் குணமடையும். 
03  தேனையும், வெங்காய சாற்றையும் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை குணமாகும். 
04  தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.
05  இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.
06  தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
07  உடம்பில் இரத்தக் பற்றாக்குறை அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.
08  தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, சிலந்தி, பழுக்காத கொப்புளங்கள் இருந்தால் பூசினால் பழுத்துவிடும். 
09  மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.
10  கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் சரியாகிவிடும். 

Leave a Reply

Your email address will not be published.