ஆலிவ் ஆயிலின் நன்மைகள்

23-1442999362-olive-oil

ஆலிவ் ஆயில்

ஆலிவ் என்ற மரத்தின் பழத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் இந்த ஆலிவ் ஆயில்.  ஆலிவ் ஆயில் என்பது மிகச்சிறந்த சமையல் எண்ணெய் ஆக அமெரிக்கா முழுவதும் பயன்படுத்துப்படுகின்றது.  ஏனென்றால் இங்கு கொழுப்பு நிறைந்த சமையல் எண்ணெய்களை பயன்படுத்த மாட்டார்கள்.

இந்த ஆலிவ் ஆயில் இரண்டு வகைப்படும். ஒன்று அழகுக்கு மற்றொன்று சமையலுக்கு.  இந்த அழகு எண்ணெய் ஆனது சமையலுக்கு பயன்படுத்த முடியாது. அதே சமயம் சமையல் எண்ணெயை அழகுக்கு பயன்படுத்த முடியாது.

ஆலிவ் எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

100 மிலி ஆலிவ் ஆயிலில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் விவரம்

100 கிராம் ஆலிவ் ஆயில் கிடைக்கும் சக்தி – 885 Kcal.

கொழுப்பு – 100 கிராம்.

சாச்சுரேட் கொழுப்பு – 14 கிராம்.

மோனோ – சாச்சுரேடட் கொழுப்பு – 75 கிராம்.

பாலி – சாச்சுரேடட் கொழுப்பு – 11 கிராம்.

ஒமேகா – 3 – 15 கிராம்.

ஒமேகா – 6 3.5 – 21 கிராம்.

புரோட்டீன் – 0 கிராம்.

விட்டமின் E – 14 mg (93%)

விட்டமின் K – 62 மைக்ரோ கிராம் (59%)

அழகுக்கு அழகு சேர்க்க

இயற்கை படைப்பில் அனைத்தும் அழகுதான். இந்த அழகுப்படைப்பின் போது சருமப்பாதுகாப்பு மிக முக்கியம். சருமத்தல் உள்ள கொப்புளங்கள், கருந்திட்டுகள், மங்குகள் போன்றவை நீக்கப்படும் போது இன்னும் அழகாக சருமம் மாறிவிடும்.

ஆலிவ் ஆயிலை எடுத்து நன்றாக மேனி முழுவதும் அழுத்தி தேய்த்துக்கொள்ள வேண்டும்.  இரவு வேலையில் தூங்கிவிட்டு மறுநாள் காலையில் எழுந்து முகம் கழுவி வர.  ஒரு மாதத்தில் முகம் ஒளி வீசும்.

வலிமையான கூந்தலுக்கு

வலிமையான கூந்தலுக்கு ஆலிவ் ஆயில் சிறந்தது.  தலைக்கு எண்ணெயாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம்.  இந்த ஆலிவ் ஆயில் தலை முடிக்கு ஆரோக்கியத்தை தரும்.  வேர்களை பலமாக்கும். பொடுகு பேன்களை நீக்கிவிடும்.

பிரசவ சுருக்கங்கள் மறைய

பிரசவித்த பின் தாய்மார்களுக்கு வயிற்றில் சுருக்கங்கள் அப்படியே இருக்கும்.  இந்த சுருக்கங்கள் மறைய (வடுக்கள்) ஆலிவ் ஆயில் எடுத்து அதை வயிற்றில் தேய்த்துவிடவும்.

இதனால் சுருக்கங்கள் மறைந்துவிடும்.  உடற்பயிற்சி செய்பவர்கள், ஜிம்முக்கு போகும் ஆண்களுக்கும் இதே பிரச்சினைதான் இவையும் சரியாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.