பாக்-ரசிகருக்கு டிக்கட் அனுப்பிய டோனி

dhonifan1

டாக்கா – ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த தன்னுடைய ரசிகர் ஒருவருக்கு இந்திய அணி கேப்டன் டோனி போட்டிக்கான டிக்கெட்டை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்தவர் முகமது பசீர் (வயது 60) தீவிர கிரிக்கெட் ரசிகர்.

பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது ஆதரவை டோனிக்கும், இந்திய அணிக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு டி20 உலககோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதியப் போட்டியை பார்க்க பசீருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனையறிந்த டோனி அவருக்கு அப்போது உதவினார்.

இதே போல் இந்நிலையில் 2015-ம் ஆண்டு உலககோப்பை போட்டியிலும் அவர் தொடர்ந்து இந்திய அணிக்காகவும், டோனிக்காகவும் ஆதரவு அளித்து வந்தார். அவருக்கு பல எதிர்ப்பு வந்தாலும் அதை எல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் டோனி, ஆசியகோப்பை லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதியப் போட்டியைக் காண பசீருக்கு டிக்கெட்டை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். இது குறித்து முகமது பசீர் கூறுகையில்:- ”இந்திய அணி கேப்டன் டோனி எனக்கு போட்டிக்கான டிக்கெட் வழங்கினார்.

அதேசமயம் நான் அப்ரிடியிடம் கேட்கவில்லை. அவரிடம் நான் பேச மாட்டேன். அப்ரிடிக்கு பாகிஸ்தானில் ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் இருக்க வாய்ப்பு இல்லை. எங்களது அணியில் ஒற்றுமை என்பதே கிடையாது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.