சோம்பல் தரும் உணவுவகைகள்

sleepy man

உங்களுக்கு பகலில் மிகவும் சோம்பேறித்தனமாக இருக்கிறதா?  ஒரேடியா தூக்கம் வருதா.  அலுவலகத்தில் வேலையே செய்ய முடியவில்லையா, அப்படியென்றால் அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.  நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட சாப்பிடவேண்டிய காலை உணவுகள் இருக்கின்றன.  பொதுவாக சோம்பேறித் தனங்கள் பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன.  அதில் குறிப்பிட்ட உணவுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மருந்துகள் குறிப்பிடத்தக்கவை,  மற்றும் சோம்பேறித்தனம் அதிகம் இருந்தால் நம் மீதே நமக்கு ஒருவித வெறுப்பு வரும்.  எனவே இவைகளில் சரியாக கவனம் செலுத்தினால் வேலைநேரத்தில் சோம்பேறித்தனமாக இருப்பதை தடுக்கலாம்.  இப்போது சோம்பேறித்தனத்தை உண்டுபண்ணும்.  உணவுகள் என்னவென்று பார்த்து அவற்றை பகலில் அதிகம் உட்கொள்வதை தவிர்க்கலாம்.தூங்கி எழுந்த பின்னரும் களைப்பாக இருக்கிறீர்களா.  கட்டாயம் இதை படித்துப் பாருங்கள்.

நம்மை மிகவும் சோம்பேறியாக்கும் உணவுகள்

  1. சாலட்

சிலர் சாலட்டை உணவாக எடுத்துக் கொள்வார்கள் உடல் பருமனை குறைக்கிறேன் என்ற பெயரில்.  சாலட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான்.  ஆனால் சாலட் சாப்பிடுவதால் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய ஆற்றல் போதுமானதாக இல்லாமல் இருப்பதோடு உடலை சோம்பேறித்தனமாக இருக்கச் செய்கிறது.

  1. பால்பொருட்கள்

பால் பொருட்கள் அதிகம் சாப்பிட்டு வந்தாலும் சோம்பேறித்தனமாகத் தான் இருக்கும்.  இதற்குக் காரணம் பால் பொருட்களில்  உள்ள புரோட்டீன் ஜீரணமாவதற்கு தாமதவாது தான்.

  1. வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள மக்னீசியம் தசைகளை சோர்வடையச் செய்கிறது.  இரவில் தூங்கப் போவதற்கு முன் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.  மேலும் வாழைப்பழம் சாப்பிடுவதால் தான், தசைகள் தளர்ந்து இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடிகிறது.

  1. வெள்ளை பிரட்

வெள்ளை பிரட்டில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது.  இந்த உணவுகளை உண்பதால் நீண்டநேரம் வயிறு ரொம்பியிருப்பதோடு, சிறிது நேரம் கழித்து சோம்பேறித்தனமாகவும் இருக்கும்.

  1. இறைச்சி

இறைச்சியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து போவதற்கு உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து போவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.  இதனால் தான் அசைவ உணவை நன்றாக உண்டபின்னர் சோம்பேறி ஆவதோடு, நல்ல தூக்கமும் வருகிறது.

  1. செர்ரி

சொ்ரிப் பழங்களில் உள்ள மெலோடின் தூக்கத்தை தூண்டுபவை.  இப் பழத்தை இரவில் சாப்பிட்டால் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.  அதுவே பகலில் என்றால் சோம்பேறியாக இருக்கக் கூடும்.

  1. அமில உணவுகள்

முதல்நாள் இரவு அதிகமான அமில உணவுகளை சாப்பிட்டால் மறுநாள் முழுவதும் மந்தமாகவும், சோம்பேறித் தனமாகவும் இருக்கக் கூடும்.

  1. இனிப்பான உணவுகள்

நாம் சில சர்க்கரை உணவுப் பொருட்களை சாப்பிடுகிறோம்.  சாப்பிடும்பொழுது நன்றாக இனிக்கும்.  ஆனால் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிற்கு நன்றாக தூக்கம் வருவதையும் அறிவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published.