போதை ஏறியதால் தோழியின் கன்னத்தை கடித்து தின்ற குடிகாரி

1456748372-1728

தோழிகள் எல்லாம் சேர்ந்து குடிப்பதற்காக கூடி குடித்து மகிழ்கையில், போதை தலைக்கேறிய பெண் ஒருவர் தன் தோழிக்கு முத்தம் கொடுக்கப்போகையில் கண்ணத்தை கடித்து துப்பிவிட்டார்.

இங்கிலாந்தில் தோழிகள் ஒன்று சேர்ந்து ஒரு மதுவிருந்து விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். சவுத் போட் என்ற நகரில் உள்ள ஒரு இளம்பெண்ணின் வீட்டில் அந்த விழா நடந்தது. அதில் கேட்டி நெய்லட் என்ற பெண் கலந்து கொண்டார். அப்போது அந்த விழாவில், ஒரு பெண் அளவுக்கு அதிகமான மது அருந்தினார் . இதனால் அவருக்கு போதை தலைக்கு ஏறியது. அதன் விளைவாக, அவர் அருகிலிருந்து கேட்டிக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். முத்தம்தானே என்று அவரும் தடுக்கவில்லை. ஆனால் போதையேறி கிளர்ச்சியிலிருந்த அவர், அப்படியே கேட்டியின் கன்னத்தை கடித்தார். கடி வாங்கிய கேட்டி வலி தாங்க முடியாமல் அலறினார். ஆனாலும் அந்த பெண், அவரை ஆழமாக கடித்து அவரின் கன்னத்தின் சதையை எடுத்து துப்பி விட்டார்.

இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய கேட்டியை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். போகும்போதே அந்த பெண், கடித்து துப்பிய சதை பகுதியையும் எடுத்து சென்றுள்ளார்கள். மருத்துவர்கள் அந்த சதையை எடுத்து கேட்டியின் கன்னத்தில் ஒட்ட வைத்து சிகிச்சை செய்துள்ளனர். இருந்தாலும், அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.இது தொடர்பாக கேட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.