காரில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதித்த காவல் துறை

receipt

இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஏற்படும் விபத்தில் ஏற்படும் பாதிப்பால் தலையில் அடிபடாமல் இருக்க தலைக்கவசம் (ஹெல்மெட் ) அவசியம். அதனால் போக்குவரத்து துறை இருசக்கர வாகனங்களுக்கு ஹெல்மெட் போட வேண்டும் என்று நெறமுறைப்படுத்தியுள்ளது.

ஆனால் காரில் ஓட்டுநருக்கு ஹெல்மெட் தேவையா அதுவும் பின்னிருக்கையில் உட்கார்ந்திருப்பவருக்கு மிக அதிகம் தான்.  அப்படி ஒரு சம்பவம் பெங்களுரில் நடந்தேறியுள்ளது. காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி பா.ஜ.க. பிரமுகருக்கு அபராத ரசீது அனுப்பி உள்ளது போலீஸ்.

பெங்களூரு மல்லேஷ்வரத்தில் வசித்து வருபவர் பா.ஜ.க. பிரமுகர் பிரகாஷ். இவருக்கு, பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீசாரிடம் இருந்து நேற்று முந்தினம் அபராதம் கட்டும்படி ரசீது ஒன்று வந்தது. அந்த ரசீதை பார்த்த பிரகாஷ் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ரசீதில், ‘பிரகாஷ் காரின் பதிவு எண் குறிப்பிடப்பட்டு, பசவேசுவரா சர்க்கிளில் கடந்த 4-ம் தேதி உங்கள் கார் சென்றபோது அதில் பின் இருக்கையில் பயணம் செய்தவர் ஹெல்மெட் அணியாமல் இருந்துள்ளார். அதனால் நீங்கள் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும்‘ என குறிப்பிடப்பட்டு இருந்து உள்ளது.

இதுகுறித்து பிரகாஷ் உடனடியாக மாநகர போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, காரின் பின் இருக்கையில் பயணம் செய்பவர் ஹெல்மட் அணிய வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, பெங்களூரு மாநகர போக்குவரத்து உயர் போலீஸ் அதிகாரி கூறும்போது, ‘இந்த தவறு, இயந்திர கோளாறு காரணமாக நடந்துள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.