பெற்றோருடன் தூங்கிய சிறுமி கிணற்றில் பிணமாக மிதந்தார்

c7c00384406c35b81741b74b364344cf_L

இரவு பெற்றோருடன் தூங்கிய சிறுமி, எழுந்த பார்த்த போது கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்தேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சூனாம்பேட்டைக்கு அருகில் உள்ள கல்பட்டு கிராமத்தில் உள்ள சதீஸ்குமார்.  அவரின் மகள் திவ்யா (6).  ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றாள். நேற்றைய தினம் இரவில் தனது பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்தாள்.

நள்ளிரவு நேரம் சதீஸ்குமார் எழுந்து பார்க்கையில் மகளைக் காணவில்லை. பின் அனைத்து இடங்களிலும் தேடி அலைந்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் தந்தை சதீஸ்குமார், மகளைக்காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதற்கிடையில் திவ்யா வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தார்.  சிறுமி தானாக போய் தூக்கக்கலக்கத்தில் விழுந்து விட்டாரா? அல்லது நரபலி கொடுக்கப்பட்டாலா அல்லது கொலைசெய்துவிட்டார்களா? என்று பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர். உடலை மதுராந்தகம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இரவில் தூங்கிக்கொண்டிருந்த மகளை திடீரென்று காணாமல் போய் மறுநாள் கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் காண்போர் நெஞ்சை பதை பதைத்தது.

Leave a Reply

Your email address will not be published.