நடைப்பயிற்சியின் செய்யப்போறீங்களா – அப்ப இதை செய்யாதீங்க

3a1788f6-384d-4748-9b9f-cf9135f120f2_S_secvpf

தற்போதைய நவீன உலகத்தில் உடல் உழைப்புகள் குறைந்து போயின.  எல்லாருக்கும் அமர்ந்து கொண்டே பார்க்கும் வேலைகள் வந்துவிட்டதால் எல்லோரும் உடல் உழைப்பை மறந்துவிட்டனர். சைக்கிள் மிதிப்பது, மாடிப்படி ஏறுவது, கடைக்கு செல்வது போன்றவற்றை கடின வேலையில் சேர்த்துவிட்டனர்.

உடல் உழைப்பு குறைந்ததே தவிர வாயின் உழைப்பு மட்டும் குறையவேயில்லை.  நொறுக்கு தீனிகள், அசைவங்கள், துரித உணவுகள் என்று எல்லாமே கொழுப்பு நிறைந்த உணவுதான்.  தினமும் சாப்பிட்டு வருகின்றார்கள். இதனால் தொப்பை, உடல் பருமன் ஏற்படுகின்றது. கொழுப்பு நிறைய சேர்வதால் இதயத்தில் அடைப்பு ஏற்படுகின்றது.

இப்படிப்பட்டவர்கள் மீண்டும் தனது உடலை குறைக்க வழி கிடைக்காமலும் வாயைக் கட்ட முடியாமலும் கடைசியாக எடுக்கும் ஆயுதம் தான் நடைப்பயிற்சி.  தன்னை நம்பி தினந்தோறும் தவறாமல் செய்யும் ஆட்களை நடைப்பயிற்சி கைவிடுவதில்லை. உடலில் அவர்களுக்கு ஓரளவு மாற்றத்தையும் கொடுக்கின்றது ஆனால் மீண்டும் அவர்கள் வாயை கட்ட முடியாமல் நடைப்பயிற்சியை கைவிட்டுவிடுவார்கள்.

இதனால் நடைப்பயிற்சி செய்வதற்கு மேற்கொள்ளவேண்டியவை:

  1. நடைப்பயிற்சி செய்திட முதலில் நாம் சரியான நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுவாக காலை அல்லது மாலையில் இதனை செய்யலாம்.
  2. காலையில் வெறும் வயிற்றுடன் செய்யலாம். அல்லது மாலையில் செய்யலாம். உண்ட உணவுக்குப்பின் 2 மணி நேரம் கழித்து நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
  3. நடைப்பயிற்சி செய்திட நல்ல ஆள் நடமாட்டமுள்ள பகுதியாகவும், தெருவிளக்கு உள்ள பாதுகாப்பு பகுதியாகவும் இருக்க வேண்டும்.
  4. நடைப்பயிற்சி குறைந்தது தினமும் 1 கி.மீ தூரம் இருக்க வேண்டும்.
  5. வெறும் கால்களில் நடக்கலாம். பாதையில் கரடு முரடு இருந்தால் அக்கு பங்க்சர் செருப்பு அணிந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொள்ளலாம் தவறில்லை.
  6. துணையுடன் செல்வது நல்லது. வயதானவர்கள் தனியாக நடைப்பயிற்சி செய்ய வேண்டாம்.
  7. நடைப்பயிற்சிக்கு முன்னர் பால், பழரசம், தண்ணீர், போன்ற திரவ உணவுகளை மட்டும் உட்கொள்ளலாம்.
  8. நகைகள் அணிந்து கொள்ளவேண்டாம். எளிய ஆடைகளை அணிந்து கொண்டு நடக்கலாம்.
  9. மறக்காமல் கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு செல்லவும். அவசரத்திற்கு உதவும்.

நடைப்பயிற்சியை தினமும் 1 கி.மீ நடந்தாலே  ஒரு மாதத்தில் உடலில் நல்ல மாற்றங்கள் வந்துவிடும்.  இந்த காலங்களில் அசைவம், முட்டை, போன்ற எந்தவிதமான கொழுப்பு தரும் எண்ணெய் பொருட்களை சாப்பிட வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published.