freedom 251 மொபைல் நிறுவனம் பணத்தை திருப்பி அளிக்க முடிவு

freedom-251-fail

கடந்த இரண்டு வாரமாக அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் மீடியாக்களில் மிகவும் ஹாட்டான செய்தி என்றால் அது  இந்த 251 ரூபாய் மொபைல் தான் தினமும் இதைப்பற்றி புதிய செய்திகள் வந்தவண்ணம் இருந்து கொண்டே தான் இருந்தது.  எப்படி 251 ரூபாய்க்கு மொபைல் தயாரிக்க முடியும்? வருமான வரித்துறை சோதனை, அரசாங்கம் நெருக்கடி போன்ற பல சிக்கல்களில் மாட்டித்தவித்த ரிங்கிங் பெல் நிறுவனம். தற்போது பணத்தை முடித்துள்ளது.

மலிவு விலை செல்லிடப்பேசி தயாரிக்கப்படுவது தொடர்பாக எதிர்மறை கருத்துக்கள் வந்ததை அடுத்து, முன்பணம் செலுத்திய 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திருப்பியளிப்பது என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் மோகித் கோயல், பிடிஐ செய்தியாளரிடம்

ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

முன்பணம் செலுத்திய 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் பணம் திருப்பியளிக்கப்படும். சிசிஅவென்யூ, பேயூ பிஸ் ஆகிய முறைகளில் திருப்பியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் மோகித் கோயல்.

Leave a Reply

Your email address will not be published.