முழு உடல் பரிசோதனைகள்.

body scan

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்போதாவது வருகின்ற நோய்களாகவும் உடல்நல கோளாறுகளாகவும் கருதப்பட்டுவந்த ஹார்ட் அட்டாக், புற்று நோய், இருதய குழாய் பிரச்சினைகள், மூளை முடக்கு வாதம் போன்றவை இன்று மிக சாதாரணமாக ஏதோ சளி, காய்ச்சல் போல மக்களிடையே ஏற்பட்டு வருகிறது.  இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் அதிகம் வருகிறது.  நாம் சிறுவர்களாக இருந்தபொழுது புற்றுநோய் அல்லது புற்று நோயால பாதிக்கப்பட்டவர்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.  ஒரு சிலரை பார்த்திருப்போம்.  ஆனால் இன்றைக்கு தினசரி வாழ்க்கையில் கடந்து செல்லும் விஷயமாக உருவெடுத்து வருகிறது.  நமது வாழ்நாளும், வாழ்க்கையும் சுருங்கிக் கொண்டே வருவதை நீங்கள் என்றாவது நினைத்து பார்த்ததுண்டா.  நிச்சயமாக இருக்காது.  ஆண்களே! நீங்கள் தூக்கத்தில் தானாக விந்து வெளியேறுகிறதா,  அதை சரி செய்ய வழிகளும் இருக்கின்றன.  நமது தாத்தாக்கள் வயது 80-90 களில் இருந்தது.  ஆனால் இப்பொழுதோ 50ஐ எட்டுவதே மிக கடினமான செயலாக இருக்கிறது.  அதிகரித்து வரும் உடல் நலக் கோளாறுகள் தான் இதற்குக் காரணம் என்று சொல்லிவிட முடியாது.  வாழ்வியலில் வேகத்தில் நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள தவறி விட்டோம்.  தேகத்தின் முடி வளர்ச்சி உங்கள் உடல்நலத்திற்கு என்ன செய்கிறது என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.  வரும் முன் காப்போம் என்ற வாக்கியத்தை பள்ளி வாழ்க்கையோடு மறந்து விட்டுத்தான் வாழ்ந்து வருகிறோம்.  ஒரு சில பரிசோதனைகளை ஒவ்வொருவரும் சரியான நேரத்தில் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.  இது, உங்களுக்கும் உங்களை நேசிக்கும் குடும்பத்திற்கும் நன்மை பயக்கும்.

கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய உடல்நல பரிசோதனைகள்

  1. குடல் புற்றுநோய்.

குடல் புற்று நோயானது பொதுவாக ஏற்படுகின்ற புற்றுநோய் பட்டியலில் மூன்றாவது இடத்தை அடைந்திருக்கிறது என ஐரோப்பாவில் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.  தொடக்கத்தில் பெரியதாய் எந்த அறிகுறியையும் காட்டாது.  ஆனால் கடைசியில் இதன் விளைவுகள் எல்லா புற்று நோய்களை போலவும் மிகவும் கொடுமையானதாகத்தான் இருக்கும்.  எனவே 40-50 வயதுள்ளவர்கள் இந்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

  1. கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங்

பெரும்பாலான பெண்களுக்கு இப்போது கர்ப்பப்பை வாய் பிரச்சனைகள் ஏற்படுகிறது.  இதில் பரிசோதனை செய்யாத பலருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயாகக் கூட மாறியிருக்கிறது.  ஆகவே கர்ப்பப்பை வாய் ஸ்கிரீனிங் பரிசோதனை பெண்கள் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

  1. கொழுப்பு மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகள்

ஆண்களும், பெண்களும் கொழுப்பு மற்றும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.  ஏனென்றால் நீரிழிவு, இதய கோளாறுகள் போன்ற பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தான்.

  1. மார்பக புற்றுநோய் பரிசோதனை

உணவுப் பழக்க மாற்றத்தினால் மார்பக புற்று நோய் வருகிறது.  அதிக இரசாயன கலப்பு உள்ள ஆபரணங்களை பயன்படுத்துவதாலும் வருகிறது.  இது போன்ற காரணங்களினால் இளம் பெண்களுக்கு அதிக அளவு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.  எனவே வருடம் ஒரு முறை மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

  1. கண் பரிசோதனைகள்

கண் பரிசோதனை எல்லாம் வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம்,  என்ன மீறி போனால் கண்ணாடி போடச் சொல்வார்கள் என்று அதிகம் பேர் சாதாரணமாக நினைக்கின்றனர்.  முன்பெல்லாம் எழுபது வயது முதியவர்களுக்கு இருந்த கண் கோளாறுகள் இன்றைய இருபது வயது இளைஞர்களுக்கு இருக்கிறது.  ஆகவே கண்  பரிசோதனை செய்து கொள்வது உங்கள் பார்வையை பாதுகாக்கும்

  1. சரும பரிசோதனை

முகப்பருக்களுக்கு எடுத்துக் கொள்ளும் கவனம் கூட, சருமத்தின் மீது யாரும் அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை.  நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சென்ட்டு, வாசனை திரவியம், அலங்காரப் பொருட்கள் மற்றும் பவுடர் போன்றவை கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் சருமத்தில் விஷமாய் பரவிக் கொண்டிருக்கிறது.  இது சரும அழற்சிகள், சரும புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.  எனவே சரும பரிசோதனைகள் செய்து கொள்வதன் மூலம், இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

  1. பொது உடல் பரிசோதனை

குறைந்தது 30 வயதிலிருந்தாவது வருடம் ஒரு முறையாவது பொது உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.  குடும்பத்தாரும் செய்து கொள்வது அவசியம்.  இந்த பரிசோதனை உங்கள் உடல் நலத்தை பாதுகாக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published.