கடுமையான விஷக்கடிக்கும் உயிரைக்காக்கும் உடனடி மருத்துவங்கள்

21mp_Janaki_JPG_1059367f

வேலைசெய்யும் போதும், வயல் வெளிகளில் உழைக்கும் போதும் எதிர்பாராதவிதமாக விஷ ஜந்துக்கள் நம்மை தீண்டிவிட வாய்ப்புண்டு அவ்வாறு தீண்டும் போது நமக்கு விஷத்தைவிட பயத்தில் தான் உயிர்ப்போக வாய்ப்புண்டு.  எனவே உடனே மருத்துவனைக்கு போக முடியாத சூழ்நிலையில் கீழ்க்காணும் விஷமுறிவு வைத்தியங்களை முதலுதவியாக செய்து கொள்ளலாம்.

பாம்புக்கடி

பாம்புக்கடி தான் கொடிய விஷம். இதிலும் விரியன் வகை பாம்புகள் கடித்தால் நிலைமை மோசம் தான். பாகல் இலையை கசக்கி சாறு பிழிந்து குடிக்கவும். கசப்பு தெரியும் வரை குடிக்கவும் விஷம் முறிய வழி இது தான்.

நல்ல பாம்பு கடித்தால் வாழை மரப்பட்டை கொடுத்து கடிக்கச் சொல்லுங்கள் சாறு உடனே வரும். வந்த சாற்றினை விழுங்கவும். நிறைய சாறு உடனே வரும். இதனை குடிக்கவும். வாழைப்பட்டையின் மீது படுக்க வைப்போம்.

தேள்

பாம்புக்கு அடுத்தப்படியாக விஷமுடையது தேள் தான். கூடவே நெடியும் ஏறி ஆளை ஆடச் செய்து விடும். இந்த தேள் விஷம்.  வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாக கலந்து கடிவாயில் அழுத்தி தேய்க்கவும்.

இதேபோல் நட்டுவாய்க்காலி மிகவும் கொடிய விஷம் உடையது. ஒரு பெரிய தேக்காயை வாயில் போட்டு வேகமாக மென்று விழுங்கிக்கொண்டே இருக்கவும் விஷம் முறிக்கப்படும்.

வெறிநாய்

மஞ்சளையும், பிரண்டையையும் சம அளவாக எடுத்து மையைப் போல் அரைத்த நல்லெண்ணெய் காயவைத்து வதக்கி அதை பல் பட்ட இடத்தில் வைத்துக் கட்டவும் நீராகாரம் குடிக்கவும்.

வீட்டு நாய் என்றால் கைவைத்தியத்துடன் புண் ஆறும் ஒரு மாதம் வரையில் கரப்பான் ( கத்திரிக்காய், கருணைக்கிழங்கு ) போன்றவற்றை சாப்பிடக்கூடாது.

வெறிநாய் என்றால் கண்டிப்பாக மருத்துவமனைக்கு சென்று வெறிநாய் ஊசி போட வேண்டும். மருத்துவரின் ஆலோசனை கேட்கவேண்டும்.

சிலந்தி

காட்டுச்சிலந்தி கடித்தால் அந்த இடத்தில் சிறிய கொப்புளம் உருவாகிவிடும். ஆடாதொடை இலை, விராலி மஞ்சள், மிளகு மூன்றையும் அரைத்து வைத்து கட்டவும்.

பூரான்

மண்ணெண்ணையை துணியில் நனைத்து கடிவாயில் வைத்து பரக்க தேய்க்கவும்.  அரிப்பு நின்றுவிடும்.

Leave a Reply

Your email address will not be published.