சுவாச நோய்களை தீர்க்கும் ஆடாதொடை

aadaa-thoda
பச்சை பசேல் போன்ற பெரிய செடியாகவும், வெள்ளை மற்றும் சிகப்பு கலந்த பூக்களையும் உடைய தாவரம் ஆடாதொடை.  ஆடாதொடை ஆற்றோரப்படுகைகளில், வயல்வெளி வரப்புகளில் தானாகவே வளரக்கூடியது.   இந்த தாவரம் சுவாச சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளையும் நீக்கி விடுகின்றது.
வயதானவர்களுக்கு நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டுக்கொண்டிருக்கும், இருமல், இரத்தம் வருதல் போன்றவை ஏற்படும்.  இது நாட்பட்ட காசநோயை குறிக்கின்றது.  இதை சரிசெய்ய ஆடாதொடை இலைச்சாற்றினை சாறுபிழிந்து எடுத்து அதனுடன் சிறிது தேனையும் கலந்து சாப்பிட வேண்டும். தினமும் நான்கு வேளை சாப்பிட்டால் சளி இருக்காது மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கி விடும்.
குழந்தைகட்கு கொஞ்சம் குறைவாக ஒரு டீ-ஸ்பூன் கொடுத்தால் போதும். காசநோய்க்கு (எலும்புருக்கி) ஆடாதொடைதான் சிறந்த மருந்து. ஆடாதொடை இலை 10 அல்லது 15 பறித்து 1 லிட்டர்  நீரில் போட்டு நன்றாக கொதிக்க காய்ச்ச வேண்டும். வடிகட்டி தேன் கலந்து 2 வேளை 48 நாட்கள் குடித்து வர வேண்டும். இதனால் காசநோய் சம்பந்தமான வலி, இருமல், விலா வலி, இரும்பும் போது வாந்தி எல்லாம் சரியாகிவிடும்.
ஆடாதொடை இலையை காயவைத்து பொடித்து இதை ஊமத்தை இலையில் வைத்து சுருட்டு தயாரித்து காயவைத்து பிடித்தால், மூச்சுத்திணறல் சரியாகிவிடும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடுப்பில் டைட்டாக துணி அணிவதால் இடுப்பைச் சுற்றி புண்கள் மற்றும் கருமையானது இருக்கும்.  இதைப்போக்க ஆடாதொடை இலையுடன் குப்பை மேனி இலையை அரைத்து பற்றுப் போட்டு வர புண்கள் ஆறிவிடும். கருமையும் நாள்பட மறைந்துவிடும்.
இதன் இலையுடன் சிவனார் வேம்பு இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, கட்டி போன்ற உள் இரணங்களும், நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக்கடி, விஷம் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published.