இரயில் டிக்கெட் ரத்து செய்ய 139 அழையுங்கள் – புதிய வசதி

download (8)

ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், தேவையில்லை என்றால் தங்கள் மொபைல் மூலமே அதை ரத்து செய்யலாம் என்று புதிய வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு ரயிலில் பயணம் செய்தவர்கள், அதை ரத்து செய்ய விரும்பினால் ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டும். அல்லது இணையதளத்தில் ரத்து செய்யவேண்டும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதிபடி, உங்கள் பயணத்தை ரத்து செய்வதற்கு உங்கள் மொபைலில் இருந்து 139 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், உங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய ஒரு கடவுச்சொல்(பாஸ்வேர்டு) அளிக்கப்படும்.

அதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் டிக்கெட்டை ரத்து செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.