இரத்தப்புற்று நோய் தாக்கிய கல்லூரி மாணவிக்கு குருத்தணு தேவை

201602262140237537_Student-urgently-looking-for-stem-donor-within-two-months-to_SECVPF

இலங்கையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மகளை காப்பாற்ற பெற்றோர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள லண்டனில் வோல்தம்ஸ்டோ பகுதியில் வித்யா அல்போனஸ் என்ற இலங்கை மாணவி வசித்து வருகிறார். இவர் அங்குள்ல பல்கலைகழகம் ஒன்றில் கண் தொடர்பான படிப்பினை இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

மாணவி வித்யா அல்போனஸ்க்கு கடந்த சில வாரங்களாக திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், அவருக்கு லூக்கிமியா என்னும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவியிடம் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மாணவியின் உடல் நலம் பலவீனமாக அறிந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு உடனடியாக குருத்தணு மாற்று சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாணவியின் சகோதரர் குருத்தணு கொடுக்க முன் வந்தார்.இதையடுத்து அவரது சகோதரரின் குருத்தணுவை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர் வெறும் 50 சதவீதம் மட்டுமே மாணவியின் குருத்தணுவுடன் ஒத்துப்போனது.எனவே அவருக்கு குருத்தணு தானம் பெறுவதற்காக, குருத்தணு தானம் தொடர்பான விழிப்புணர்வை அவரது பெற்றோர்கள் மேற்கொண்டு வருகின்றனர். (குருத்தணு) Stem cell தானம் செய்பவர்கள் To sign up to the donor list go to www.anthonynolan.org if you’re 16-30. For more information phone the charity on: 0303 303 0303 அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் எனக்கு ஆதரவாக குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். அதனை பார்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் அனுப்பிய செய்திகள் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விழிப்புணர்வு மூலம் எனக்கு நன்மை ஏற்படவில்லை என்றாலும் கண்டிப்பாக யாருக்காவது நன்மை ஏற்படும். இவ்வாறு மாணவி வித்யா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.