பல்லுக்கேற்ற உணவுகள்

teath

 

வீட்டில் சமைக்கப்படும் இந்திய உணவு வகைகளை சாப்பிடுவதை விட வேறு எதிலும் ஆரோக்கியம் இல்லை என்பது நமக்கு பலதடவை சொல்லப்படும் ஒரு கருத்தாகும்.  இது உண்மையாக இருந்தாலும் கூட இவ்வகையான உணவுகள் உங்கள் பற்களுக்கு அளிக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.  தவறான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் முறையற்ற பல்லுக்குரிய பழக்க வழக்கங்கள் போன்றவைகள் எனாமலை அரிக்க வைக்கும்.  இதனால் பற் கூச்சம் ஏற்படும்.  பொதுவான சில இந்திய உணவுகள் பற்களுக்கு நல்லதா கெட்டதா என்பதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

  1. வெங்காயம்.

அற்புதமானது.  நம்உணவுகளுக்கு அருமையான மணம் மற்றும் ருசி அளிப்பதனால் மட்டும் வெங்காயம் பகழ் பெறவில்லை.  பாக்டீரியாவை நீக்குகிறது.  வெங்காமம்.  நம் வாயையும், உடலையும் இயற்கையான முறையில் சுத்தப்படுத்துகிறது.  இருந்தாலும், வெங்காயம் நிறைந்த உணவுடன் கொஞ்சம் புதினாவையும் சேர்த்துக் கொண்டால் இன்னும் சிறந்த பலனை பெறலாம்.

  1. ஊறுகாய்.

ஊறுகாய் நல்லதல்ல.  கடைகளில் விற்கும் ஊறுகாயில் வினீகர் மற்றும் பதப்படுத்தப்படும் பொருட்களை உபயோகப்படுத்துவதால் அதில் அமிலத்தன்மை மிகுதியாக இருக்கும்.  ஆகையால் வீட்டில் தயாரிக்கும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லது.  மேலும் ஊறுகாயை மிதமான அளவில் சாப்பிடுவதும் நல்லதாகும்.

  1. எள்விதை.

எள்விதை சிறந்தது.  இந்த சிறிய விதைகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால், அது உங்கள் பற்களை உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.  மேலும் பற்படலத்தை இந்த விதைகள் கரைக்கிறது.

  1. உலர்ந்த பழங்கள்

உலர்ந்த பழங்களை பயன்படுத்த வேண்டாம்.  உலர்ந்த பழங்கள் பிசுபிசுப்பாகவும், அதிகமான இனிப்புடனும் இருக்கும்.  அவை பற்களில் வேகமாக ஒட்டிக் கொள்வதோடு மட்டுமில்லாமல் அதிலுள்ள இனிப்பு வாயில் உள்ள பாக்டீரியாக்களுக்கு உணவாக அமைகிறது.  பாக்டீரியாக்கள் இனிப்பை உண்பதால் அவை அமிலத்தை வெளியேற்றுகிறது.  இது பற்களை அரிக்க தொடங்குகிறது.  ஆகையால் உலர்ந்த பழங்கள் அதிகமாக சாப்பிடாதீர்கள்.

  1. மசாலா குழம்புகள்

மசாலா குழம்புகளை தவிர்த்து விடுங்கள்.  இந்திய உணவு வகைகளில் இது கட்டாயமானது தான் என்றாலும் கூட குழம்புகளில் மசாலாக்களும், அமிலத்தை உண்டு பண்ணுகின்ற பொருட்களும் இருக்கும்.  ஆகையால் அவற்றை சாப்பிட்டபிறகு வாயை நன்றாக கழுவவும்.

Leave a Reply

Your email address will not be published.