எலும்பு தேய்மானத்திற்கு நிவாரணம்

images (7)

வயது ஏற பல வலிகளும், வியாதிகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றது.  இந்த வியாதிகளையும் வலிகளையும் போக்குவதற்கு ஏறாத மருத்துவமனைகளும், சாப்பிடாத மருந்துக்களும் இல்லை என்று கூறலாம்.  அந்த அளவுக்கு பிரச்சினைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த எலும்புத் தேய்மானம்.

அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும். அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.

மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம். ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும். ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

எலும்பு பலம் ஏற தினமும் உளுந்தக்கஞ்சி வைத்து சாப்பிடுவது நல்லது.  இது எலும்பு பலம் ஏற தேவைப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.