மரியாதைக்குரிய மருதோன்றியின் பயன்கள்

மருதாணி

விழாக்காலங்கள் மற்றும் பண்டிகையின் போது மருதோன்றியை எல்லோருடைய கைகளிலும் பார்க்கலாம். கைகளுக்கு அழகாகவும், உடலுக்கு குளிர்ச்சியாகவும் மருதோன்றி வைக்கப்படுகின்றது. வெயில் காலங்களில் ஒரு வாரத்திற்கு ஒரு முறை பாதம், உள்ளங்கைகளில் மருதோன்றி வைக்க வேண்டும்.

பொதுவாக இரவில் உறங்குவதற்கு முன்னர் தான் மருதோன்றியை வைப்பார்கள்.  மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் பகலில் வைப்பது மிக்க நல்லது. மருதோன்றி சிலர் கைகளில் நன்றாக சிவந்துவிடும்.  சிலர் கைகளில் கருமை கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும்.  இவர்களுக்கு உடலில் அதிக பித்தம் உள்ளது என்று அர்த்தம்.

மருதோன்றி இலை மட்டும் பயன்தரக்கூடியது கிடையாது.  மாறாக அதன் காய்கள், பட்டைகள் என்று அனைத்தும் மருத்துவகுணங்கள் கொண்டது.  மருதோன்றிக்கு கிருமிகளை அழிக்கும் சக்திகள் உண்டு. மருதோன்றி இலையின் சாற்றுக்கு தோலை இறுக்கும் சக்திகள் உண்டு.

மருதோன்றி இலையை அரைத்து தண்ணீர் கலந்து தலையில் தேய்க்க கேசம் பளபளப்பாக இருக்கும். கேசத்தின் வேர்க்கால்கள் வலுவாகி முடி உதிர்வதைக் தடுக்கும். கேசம் நீண்டு வளரத் தூண்டும். ஈரத்தன்மையைத் தக்க வைக்கும். கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். சோர்வகற்றும். பூக்கள் துயிலைத் தூண்டுவிக்கும்.

மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல உறக்கம் வரும். நீடித்த தலைவலிகள் அகலும்.

Leave a Reply

Your email address will not be published.