பஸ் டிக்கட் 5 ரூபாய் சில்லரை இல்லாமல் உதவி கேட்ட முதல்வர்

1456380536-9077

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பீகார் முதல்வர், பேருந்தில் டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முதன்மை செயலாளரிடம் ரூ.5 கடன் வாங்கிய சம்பவம் ருசிகரமாக அமைந்தது.

பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கலந்துகொண்டார். புதிய வழிதடங்களில் பேருந்தை துவக்கி வைத்த வர் ஒரு பேருந்தில் பயணம் செய்தார்.

அப்போது பேருந்து நடத்துனர் அவரிடம் பேருந்து கட்டணமாக ரூ.5 கேட்டார். இதையடுத்து நிதிஷ்குமார் தனது பையில் பணத்தை தேடிய போது தான் பணம் கொண்டுவராததை உணர்ந்தார்.

இதனை அறிந்த முதன்மை செயலாளர் தன்னிடம் இருந்த 5 ரூபாயை முதல்வர் சார்பாக நடத்துனரிடம் கொடுத்து டிக்கெட் வாங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.