சென்னைதான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம்

www.snipthepix

இந்திய நகரங்களில் சென்னைக்கு தனி ஒரு மதிப்பு எப்போதும் உண்டு.  இந்தியாவில் 60 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் சென்னையில் வசிக்கின்றனர்.  போதாதற்கு மழை வேறு தன் வேலையை காட்சி சென்னையை பாடாய் படுத்தி பண்படுத்திவிட்டது.

சென்னையில் பல்துறைகள் பெருகிவருகின்றன. மென்பொருள், இணையதள, தகவல் தொடர்பு என்று பல முகங்கள் சென்னைக்கு உண்டு. தினமும் நிறைய மக்கள் சென்னைக்கு வர்த்தகரீதியாக பயணம் செய்கின்றனர்.

இவர்களது பாதுகாப்பு விசயத்தில் சென்னை முதலிடம் வகித்துள்ளது. சென்னை – இந்தியாவில் உள்ள நகரங்களில் பாதுகாப்பான நகரம் சென்னை என்று மெர்சர் குளோபல் கன்சல்டன்சி நிறுவன நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறைந்த அளவிலான குற்ற நடவடிக்கைகள், ஓரளவுக்கு மேம்பட்ட சட்ட ஒழுங்கு விதிமுறைகள் போன்றவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தியதில், சென்னை மிகவும் பாதுகாப்பான நகரம் என்று மெர்சரின் வாழ்நிலை தர நிலவரம் மீதான ஆய்வு அடித்துக் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.