தினமும் திரிகடுகம் திரிபலா எடுத்துக்கொள்ளுங்கள் எமன் உங்களுக்கு நண்பன்

p61b

சங்கக்காலம் முதற்கொண்டே நம் தமிழர்கள் சித்தமருத்துவத்தில் சிறந்து விளங்கியுள்ளனர். இவர்கள் கண்டுபிடித்த மும்மருந்து மற்றும் முப்பலை என்ற இரண்டு மருந்துகள் ஒரு மனிதன் தன் வாழ் நாளில் தின்று வர அவனுக்கு எந்த வித நோய்களும் அண்டாது.

மேற்சொன்ன மும்மருந்து என்பது திரிபலாசூரணம் ஆகும்.  இந்த திரிபலா சூரணத்தில் மூன்று மூலிகை மருந்துகள் உள்ளது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றும் உள்ளது. இந்த திரபலாசூரணத்தில் மூன்று மருந்துகளும் இடித்து சலித்து பொடியாக்கி கலந்திருக்கும்.

திரிபலாவின் நன்மைகள் 

1. திரிபலாவில் கலந்துள்ள நெல்லிக்காய்ப் பொடியானது.  இளமையை தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றது.

2. நரைமுடி, பித்தம், முடிகொட்டுதல், சருமம் சுருக்கமடைதல், முதிர்ந்த தோல், போன்றவைகள் ஏற்படாமல் இந்த நெல்லிக்காய்ப் பொடி உதவுகின்றது.

3. நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கவல்லது.

4. மலச்சிக்கலை போக்க கடுக்காய்ப் பொடி உதவுகின்றது.

5. தான்றிக்காய் வயிற்றில் உள்ள பூச்சிகள், புழுக்களை அழிக்கின்றது.

6. திரிபலா இரத்தத்தை சுத்தம் செய்கின்றது.

7. புண்கள் மற்றும் கொப்புளங்கள் வராது. உடல் சூட்டை சரிசெய்து விடுகின்றது.

8. செரிமானம், அஜீரணம் முதற்கொண்டு அனைத்தையும் சரிசெய்து விடுகின்றது.

திரிகடுகத்தின் நன்மைகள்

thiri_2469665f

திரிகடுகம் பெயரே மூன்று கடுகத்தை உள்ளடக்கியது.  முப்பலை என்று இதற்கு பெயர். திரிகடுகத்தில் சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூலிகைகள் உள்ளது. இந்த மூலிகை மிகவும் பயன்தரக்கூடியது.  திரிகடுகத்தை சாப்பிட அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

1. திரிகடுகத்தில் உள்ள மிளகு வாயுப்பிரச்சினைகள், கபம் போன்றவற்றை நீக்கவல்லது.

2. சுக்கு வாயுத்தொல்லை, இருமல், செரிமானப்பிரச்சினைகள் போன்றவற்றை தீக்குகின்றது.

3. திப்பிலி ஆண்மையை, அழகை, வடிவத்தை தரக்கூடியது.

4. திப்பிலி உடலுக்கு வலிமையும், வளத்தையும் தரும்.

5. திப்பில்  ஒரு வெப்பப்பொருள். உடல் வெப்பத்தை சமன் செய்து ஆஸ்துமா நோயை விரட்டும்.

6. தொடர்ந்து திரிபலா சாப்பிட்டு வர உடலில் இதய, ஆஸ்துமா, சிறுநீரக நோய்கள் அரவே வராது.

7. நீண்ட நாட்கள் வாழ திரிபலா ஒரு முக்கிய மருந்து.

சாப்பிடும் முறை

காலையில் பல் துலக்கிவிட்டு அல்லது வாய் நன்றாக கொப்பளித்துவிட்டு ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட வேண்டும். தவறாமல் வெறும் வயிற்றில் இதை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தால் தினமும் இரண்டு நெல்லிக்கனியை சாப்பிட்டதற்கு சமமாகும்.

திரிபலாவையும் திரிகடுகத்தையும் ஒன்றாக சாப்பிட வேண்டாம். இரண்டும் வேறு வேறு வேளையில் சாப்பிடலாம். காலையில் திரிபலா என்றால் இரவில் உறங்குவதற்கு முன் பால் அல்லது தண்ணீருடன் ஒரு ஸ்பூன் திரிகடுகத்தை பொடியாக சாப்பிட வேண்டும்.

வளமுடன் வாழ இந்த உணவுகள் மிக முக்கியமானது.  நோய் வந்தவுடன் ஆயிரங்களாகவும், லட்சங்களாகவும் மருத்துவனைியில் செலவழிக்காமல். திரிபலாவைவும், திரிகடுகத்தையும், தம் குடும்பத்தோடு மருந்தை உணவாக உட்கொள்ளவேண்டும்.

One Response to தினமும் திரிகடுகம் திரிபலா எடுத்துக்கொள்ளுங்கள் எமன் உங்களுக்கு நண்பன்

  1. soundararajan says:

    very good tips please more useful sidhha medicine send my mail.

Leave a Reply

Your email address will not be published.