CSK மீதான ஆட்ட தடையை நீக்கக் கோரி சுப்ரமணிய சுவாமி மனு

download (7)

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதி முட்கல் தலைமையிலான குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி, சென்னை அணிக்க்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மேல் முறையீடு செய்தார். தனது மனுவில்ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து தடைவிதிக்கப்பட்ட அணிகளில், நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரு சிலருடைய தவறுகளுக்காக ஒட்டுமொத்த அணிக்கும் தடை விதிப்பதை ஏற்க முடியாது” என குறிப்பிட்டு இருந்தார்.இந்த நிலையில், சுப்ரமணியன் சுவாமியின் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை நடைபெறும் தேதியை விரைவில் முடிவு செய்வதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published.