கண்டங்கத்திரி நற்பயன்கள்

solanum-virginianumi

உருண்டையான மஞ்சள் நிறக் காய்களையும், முட்களைக் கொண்ட இலைகளையும் உடைய முள் தாவரம் கண்டங்கத்திரி.  இதன் காய்கள் சிறிய அளவு கத்திரிக்காய் போன்று இருக்கும். கண்ட இடத்தில் வளர்ந்து இருக்கும். பெரும்பாலும் மண் சாலைகளில், வரப்பு ஓரங்களில் வளரும். இதில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

வியர்வை அனைவருக்கும் பொதுதான். வியர்வை வழியாக அழுக்குகள் வெளியேற்றப் படுகின்றன. ஆனால் வியர்வையில் கெட்ட கொழுப்புகளும் வெளியேற்றப்படுகின்றன. இது அக்குள், மற்றும் காற்று படாத பகுதிகளில் தேங்கி வாடையை ஏற்படுத்தும்.  இதை சரிசெய்ய என்ன தான் வாசனை திரவியங்கள் பயன்படுத்தினாலும் சிறிது நேரம் தான் வேலை செய்யும்.  இதற்கு கண்டங்கத்திரி இலையை பறித்து அரைத்து சாறுபிழிந்து அதில் தேங்காய் எண்ணெய் கலந்து உடலில் பூசி வர வாடை அரவே நீங்கிவிடும்.

வாதநோய்கள் மற்றும் தலைவலி குணமாக நாம் செய்ய வேண்டியது. கண்டங்கத்திரி இலையை அரைத்து அதில் நல்லெண்ணெய் கலந்து பூசி வர கீல்வாதம், தலைவலி, கால்வலி சரியாகிவிடும்.

கண்டங்கத்தரி காயை சமைத்து உண்ணும் போது அது நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை அரவே நீக்கி வெளியே கொண்டு வந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.