எலும்பு வளர்ச்சியை தடுக்கும் உணவுப்பொருட்கள்

Bone_loss

உணவுப்பொருட்களில் பலவகைகள் உள்ளன.  உடல் ஆரோக்கியத்துக்கு வளமூட்டும் உணவுவகைகள் உள்ளன அதே சமயம் உணவுப்பொருட்களில் சிலவகைகள் நமது அன்றாட வளர்ச்சியை தடுத்தும் நிறுத்துகின்றது.  இந்த வகை உணவுப்பொருட்கள் நம் வாழ்க்கைக்கு ஏற்றதல்ல.  இவற்றை தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது.

எலும்புவளர்ச்சிதான் ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானது.  இந்த எலும்பு பலமாக இருந்தால் தான் மற்றவையெல்லாம்.  எலும்புக்கு ஊட்டச்சத்து கொடுக்க கால்சியம் மிக முக்கியமானது. கால்சியத்தில் உள்ள சுண்ணாம்புச் சத்து தான் எலும்பு வளர்ச்சியை தூண்டுகின்றது.  இதனால் எலும்பு வளம் பெறுகின்றது.

கால்சியத்தை உடலில் அதிகமாக வெளியேற்றும் உணவுப்பொருட்கள் பலவற்றை நாம் தெரியாமலே உணவாக உட்கொள்கின்றோம்.  அவ்வாறு உணவு உட்கொள்ளும் போது உடலில் உள்ள கால்சியத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து வெளியேற்றி விடுகின்றது.

இதனால் எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்றவைகள் வந்து தொந்தரவு தருகின்றது. இதற்கு காரணமான உணவுகள்.

உப்பு உடலுக்கு ஏற்றதுதான், ஒரே அடியாக உப்பை அதிகப்படுத்தவும் கூடாது குறைக்கவும் கூடாது. ஆனால் உப்பை அதிகமாக சேர்த்தால் உப்பு கொஞ்சம் கொஞ்சமாக கால்சியத்தை முழுவதும் குறைத்துவிடுகின்றது. சிறுநீரின் வழியே கரைத்தும் விடுகின்றது.

நாம் எல்லோரும் கோக் குடிக்க மாட்டோம்.  கோக் ஒரு எலும்புருக்கி.  ஒரு முட்டை ஒன்றை கோக்கில் போட்டு 3 மாதம் கழித்து எடுத்துப்பார்த்தால் கரைந்து விடும். அப்படி இருக்க கோக்கை குடித்தால் நமக்கு எலும்பு உருகிவிடும்.

சர்க்கரை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டாம். காபியுள்ள காபைன் என்ற வேதிவினைப்பொருள் கால்சியத்துடன் வினைபுரியும்.  இதனால் கால்சியம் கரைக்கப்பட்டுவிடும்.

இதைத்தவிர ஆல்கஹால், சாரயம், பீர் போன்றவைகள் மிகவும் மோசமானது. இவைகள் எலும்புகளை அரித்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.